வெண்கலச் சர்ப்பம் BRASS SERPENT 53-1121 சனிக்கிழமை மாலை, நவம்பர் 21, 1953 எவன்ஸ்வில் விளையாட்டு அரங்கம், எவன்ஸ்வில், இந்தியானா, அமெரிக்கா சகோ.வில்லியம் பிரன்ஹாம் வெண்கலச் சர்ப்பம் (53-1121) குறிப்பெடுத்துக் கொள்கிறவர்களுக்காக, எண்ணாகமம் 21-ம் அதிகாரம் 5-ம் வசனம். இப்போது, சகோதரர் போஸ்வொர்த் ஏற்கனவே பிரசங்கித்துவிட்டார். பரிசுத்த ஆவியானவர் இன்றிரவு என்ன சொல்ல விரும்புகிறார் என்பதை நான் அறிந்துகொள்ளும் பொருட்டு, கூட்டத்தின் உணர்வை நான் பெற்றுக்கொள்ளும் வரை நான் இங்கே நின்றுகொண்டிருக்கிறேன். 5-ஆம் வசனத்தை நாம் இங்கே வாசிக்கத் தொடங்குகிறோம்: ஜனங்கள் தேவனுக்கும் மோசேக்கும் விரோதமாகப் பேசி: நாங்கள் வனாந்தரத்திலே சாகும்படி நீங்கள் எங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணினதென்ன? இங்கே அப்பமும் இல்லை, தண்ணீரும் இல்லை; இந்த அற்பமான உணவு எங்கள் மனதுக்கு வெறுப்பாயிருக்கிறது என்றார்கள். அப்பொழுது கர்த்தர் கொள்ளிவாய்ச் சர்ப்பங்களை ஜனங்களுக்குள்ளே அனுப்பினார்; அவைகள் ஜனங்களைக் கடித்ததினால் இஸ்ரவே லருக்குள்ளே அநேக ஜனங்கள் செத்தார்கள். அதினால் ஜனங்கள் மோசேயினிடத்தில் போய்: நாங்கள் கர்த்தருக்கும் உமக்கும் விரோதமாய்ப் பேசினதினால் பாவஞ்செய்தோம்; சர்ப்பங்கள் எங்களைவிட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றார்கள்; மோசே ஜனங்களுக்காக விண்ணப்பம் பண்ணினான். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஒரு கொள்ளிவாய்ச் சர்ப்பத்தின் உருவத்தைச் செய்து, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவை; கடிக்கப்பட்டவன் எவனோ அவன் அதை நோக்கிப்பார்த்தால் பிழைப்பான் என்றார். அப்படியே மோசே ஒரு வெண்கலச் சர்ப்பத்தை உண்டாக்கி, அதை ஒரு கம்பத்தின் மேல் தூக்கிவைத்தான்; சர்ப்பம் ஒருவனைக் கடித்தபோது, அவன் அந்த வெண்கலச் சர்ப்பத்தை நோக்கிப்பார்த்துப் பிழைப்பான். இஸ்ரவேல் புத்திரர் பிரயாணப்பட்டுப்போய், ஓபோத்தில் பாளயமிறங்கினார்கள். 2 இப்போது, பரிசுத்த யோவானில், இது பரிசுத்த யோவான் 2-ம் அதிகாரம் 12-ம் அல்லது 14-ம் வசனம் என்று நான் நம்புகிறேன். இயேசு பேசுகிறார், நிக்கொதேமுவிடம், மேலும் சொன்னார்: சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டது போல மனுஷகுமாரனும், தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும் படிக்கு, உயர்த்தப்படவேண்டும். இப்போது, இந்த வார்த்தையின் ஆசிரியரிடம் நாம் பேசும்போது நம்முடைய தலைகளை வணங்குவோமா. 3 எங்கள் இரக்கமுள்ள பிதாவே, இதற்கு நீர் அளித்த உம்முடைய அபரிமிதமான ஆசீர்வாதங் களுடன், தகுதியற்றவர்களாகிய நாங்கள், எங்களை நீர் எந்த பூமியின் மண்ணிலிருந்து எடுத்தீரோ, இயேசு தாமதித்தால் என்றாவது ஒரு நாள் எந்த மண்ணுக்குத் திரும்புவோமோ, அந்த பூமியின் மண்ணை நோக்கி எங்கள் இருதயங் களையும் முகத்தையும் திருப்புகிறோம். ஆனால் தேவனே, என்றாவது ஒரு நாள், பூமியின் மண்ணிலிருந்து நீர் எழுப்பி உமது வலதுபாரிசத்தில் உட்காரவைத்த இயேசுவின் மூலமாக, மண்ணிலிருந்து ஒரு உயிர்த்தெ ழுதலை எங்களுக்கு வாக்குத்தத்தம் செய்தி ருக்கிறீர். இப்போது அவர்... சகல துரைத்தனங்களும் அதிகாரங்களும் மற்றும்... அவருடைய பாதங்களின் கீழே இருக்கிறது. ஒரு நாள், ஒவ்வொரு மனுக்குலத்திற்கும் வரும் மரணம் அவருடைய பாதங்களின் கீழே வைக்கப்படும். அதன்பின்பு, நாம் அவரை அவர் இருக்கிறவண்ணமாகவே தரிசிப்போம், கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்த, சாகாமை யுள்ள, ஒருபோதும் வியாதியடையாத அவரு டைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பான ஒரு சரீரத்தை நாம் பெற்றிருப்போம். 4 ஓ, அந்த மகிமையான வாக்குத்தத் தங்களுக்காக நாங்கள் உமக்கு எவ்வளவாய் நன்றி செலுத்துகிறோம். அந்த வாக்குத்தத் தங்களே தேவன், ஏனென்றால் ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது, அது மாம்சமாகி, நமக்குள்ளே வாசம்பண்ணியது. இன்றிரவு இங்கே வார்த்தை, நமக்கு முன்பாக இங்கே எழுதப்பட்டிருக்கிறது, அதற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். இப்போது இது இன்றிரவு இங்குள்ள ஒவ்வொரு இருதயத்திலும் தனக்கான நங்கூரத்தின் இடத்தைக் கண்டுகொள்ளட்டும்: முதலாவதாக இரட்சிக்கப்படாதவர்கள் இரட் சிக்கப் படவும்; பின்மாற்றக்காரர்கள், அன்பான பரலோகப் பிதாவாகிய இயேசுகிறிஸ்துவிடம் திரும்பி வரவும், மேலும்... சிலுவையில் அவர்கள் ஸ்தானத்தில் மரித்த அவருடைய பலியினால் ஒப்புரவாக்கப்படவும். பின்பு நாங்கள் கேட் கிறோம், தேவனுடைய மகிமை ஜனங்களின் மேல் தங்கும்படி, இன்றிரவு வியாதியாயிருக்கிற மற்றும் பாதிக்கப் பட்டிருக்கிற அனைவரையும் நீர் குணமாக்கும். 5 நாளை ஓய்வுநாள், ஞாயிறு பள்ளிகள் எல்லா இடங்களிலும் நடக்கும், வானொலி ஒளிபரப்புகள். இன்றிரவு, மதுபானக் கடைகள், சாலையோர விடுதிகள் வாலிப ஆண்களாலும் பெண்களாலும் நிரம்பியிருக்கின்றன; பாவம் முதிர்ந்த தாய்மார்கள் உடைந்த இருதயத்துடன், தங்கள் மகன்களுக்காகவும் மகள்களுக்காகவும் ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள். "சபையே, ஓ தேவனே, எப்படியாவது, நாளை இந்த நகரத்திலே இங்கு நமக்கு ஒரு அசைவாடுதல் உண்டாகக்கூடுமா? நாளை, ஒவ்வொரு சபையும் ஜனங்களால் நிரம்பி யிருக்கும்படியும், நகரத்தின் மேல் அப்படிப் பட்ட ஒரு பெரிய அமைதி அல்லது ஒரு பயபக்தி உண்டாகும்படியும் அருள்புரியும் பிதாவே; தேவன் சொல்வதுபோல, ""இப்போது, நீங்கள் அமைதியாயிருங்கள், என்னை பேசவிடுங்கள், நான் உங்கள் சோர் வடைந்த இருதயத்தோடு பேச விரும்புகிறேன்."" அருள்புரியும், ஆண்டவரே." 6 ஆண்டவரே, இந்த சபையிலே, இன்றிரவு இங்கேயே தொடங்குங்கள். உமது அடியானாகிய என்னிலிருந்து தொடங்குங்கள். ஒவ்வொருவரும் தேவனுடைய ஆசீர்வாதத்தை உணருவார்களாக. நாளை, தெருக்கள் முழுவதும் மக்கள் தங்கள் சுகத்தைக் குறித்து சாட்சி சொல்வதாய் இருக்கும்படியாக, இன்றிரவு வியாதியஸ்தர்கள் அப்படிப்பட்ட ஒரு வழியில் சுகமாக்கப் படுவார்களாக. அது யாருக்கு உரியதோ, அந்த உமக்கே நாங்கள் எல்லா துதியையும் செலுத்துவோம். இதை உம்முடைய சொந்த நேச குமாரனாகிய, இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 7 வேதாகமத்தில் உள்ள நிழல்கள் மற்றும் நிஜங்கள்: நிஜம், நிச்சயமாக, நிழலை அகற்றிவிடுகிறது. ஆனால் நீங்கள் கவனித்தால், மோசே நிழலாக, ஒரு வெண்கலச் சர்ப்பத்தை ஸ்தாபித்தார். ஒரு சில நிமிடங்களுக்கு நான் உங்கள் கவனத்தை அதன்பால் ஈர்க்க விரும்புகிறேன். மேலும் அது... இன்றிரவு நான் சில சாட்சிகளை சொல்லவிருந்தேன், ஆனால் நான் காத்திருக்கிறேன். 8 நான் இதை தேவனுடைய வார்த்தையின் மீது வைக்க விரும்புகிறேன், ஏனென்றால் எப்படியிருந்தாலும், ஒருவரால் சரியாய் கட்டப்படக்கூடிய ஒரே அஸ்திபாரம் இது மட்டுமே. தேவன் இந்த வார்த்தையைத் தவிர வேறு எந்த அஸ்திபாரத்தையும் ஒருபோதும் அங்கீகரிக்கமாட்டார். """போடப்பட்டிருக்கிற அஸ்தி பாரத்தை அல்லாமல் வேறே அஸ்தி பாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது."" அப்படியா...? இதுவே ஆதியில் இருந்த தேவனுடைய வார்த்தை, வேறு ஏதாவது சொல்லப்பட்டால், அது இந்த வார்த்தையுடன் ஒப்பிடப்படாவிட்டால், அது தேவனிடத் திலிருந்து வந்ததல்ல என்று நான் நினைப்பேன்; " "ஏனென்றால் வேதாகமம் சொல்லுகிறது, ""எடுத்துப்போடுகிறவன், அல்லது கூட்டுகிறவன்: அவனுடைய பங்கும் ஜீவபுஸ்தகத்திலிருந்து எடுத்துப்போடப்படும்."" ஆகையால், நமது உபதேசத்தை எப்போதும் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதின் மீதே நாம் வைத்திருக்கிறோம் என்பதை நாம் உறுதியாகக் கொண்டிருக்க விரும்புகிறோம்." 9 எந்த நேரத்திலாவது, எந்தவொரு நபராவது என் கூட்டத்தில் தேவனுடைய வார்த்தையின் அடிப்படையில் இல்லாத ஏதேனும் ஒன்றைக் கண்டால், அதைக் குறித்து எனக்குத் தெரியப்படுத்த வேண்டியது ஒரு சகோதரனாக அல்லது சகோதரியாக உங்கள் கடமையாகும். என்னிடம் வாருங்கள், எனக்கு எழுதுங்கள், ஏதோவொரு வழியில், எனக்குத் தெரியப்படுத்துங்கள்; நான் நிச்சயமாக அதை விரும்புகிறேன்: இதுதான் முதலாவது. 10 இப்போது, பழைய ஏற்பாட்டில் இருந்தது—இருந்தது நிழல்கள்; தேவன் இஸ்ரவேலை நடத்தினதுபோல, எல்லா பலிகளும், பிராயச்சித்தங்களும், மற்றும் பழைய ஏற்பாட்டில் உள்ள எல்லாமும்: கிறிஸ்துவையே குறித்துப் பேசினது. மேலும் கிறிஸ்துவுக்குள்: மனுக்குலத்திற்கான தேவனுடைய மீட்பின் முழுமையான திட்டத்தின் மையம். இன்றிரவு உங்களுக்குத் தேவையான ஒவ்வொன்றும், கிறிஸ்துவுக்குள் இருக்கிறது. 11 இப்போது, இதைக் கவனியுங்கள், பிராயச்சித்தத்தில் உள்ள தெய்வீக சுகமளித்தலை. ஆதியிலே கிறிஸ்து, ஒரு அக்கினி ஸ்தம்பத்தின் ரூபத்தில் சபையை நடத்திக்கொண்டிருந்தார். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அது கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? வேதாகமம் அது அவர்தான் என்று சொல்லுகிறது: """எகிப்திலுள்ள பொக்கிஷங் களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை மோசே அதிக பாக்கியமென்று எண்ணினான். அவன் எங்கே போகிறான் என்று அறியாமல் எகிப்தை விட்டான், ராஜாவின் கோபத்திற்கும் பயப்படவில்லை: ஆனால் அவன் கிறிஸ்து வினால் நடத்தப்பட்டான்.""" 12 இப்போது, அநேக ஜனங்கள்... மேலும் சற்று காலத்திற்கு முன்பு, ஒரு யூதனிடம் பேசிக்கொண்டிருக்கையில், ஜான் ரைன் என்ற பெயருடைய ஒரு நபர், ஒரு பார்வையற்றவர் குணமடைந்ததை அவர் புரிந்துகொள்ள முடியாத விதத்தில். (இங்குள்ள ஜான் அல்ல. அவருக்கு இவரைத் தெரியும்.) ஆனால் இந்த மனிதர் இண்டியானாவின் ஃபோர்ட் வெய்னில் சுகமாக்கப்பட்டார், அவர் இருபது வருடங் களாக பார்வையற்றவராக இருந்தார். அவர்—அவர் வரிசையில் வந்தார், அவர் விசுவாசத்தில் ஒரு கத்தோலிக்கராக இருந்தார், அவர் வரிசையின் வழியே வந்தபோது, அவர் சொன்னார்... 13 நான் ஒரு பெண்ணுக்காக ஜெபித்தேன், அவள் மேடையை விட்டு இறங்கியதும் அலறத் தொடங்கினாள். அவளிடம் ஒரு குடை இருந்தது, மழை பெய்து கொண்டிருந்தது, அவள் அந்தக் குடையை சுழற்றிக் கொண்டி ருந்தாள். அவளது தொண்டையிலிருந்த ஒரு பெரிய கண்டமாலை அவளது தொண்டையை விட்டு நீங்கிவிட்டது. அவள் அலறிக்கொண்டே அதை தொடர்ந்துகொண்டிருந்தாள். ஜனங்கள், அவர்கள் அவளை அமைதிப்படுத்த வேண்டி யிருந்தது. 14 அதன்பின்பு, இந்த மனிதர் உள்ளே வந்தபோது, அவரை ஒரு மனிதர் நடத்திக் கொண்டு வந்தார். நான்—நான் நின்று, சில கணங்கள் அவரை கவனித்தேன், அவர் யார் என்பதையும், அவர் என்ன செய்திருக்கிறார் என்பதையும் அவரிடம் சொன்னேன், தன் வாழ்க்கையில் அவர்—அவர் என்னவாக இருந்தார் என்பதை அவரிடம் சொன்னேன். அவர் செய்தித்தாள்களை விற்றுக் கொண்டி ருந்தார். """ஆம்.""" "நான் சொன்னேன், ""விசுவாசத்தில் நீங்கள் ஒரு கத்தோலிக்கர்.""" "15 ""ஆம், அது சரிதான்."" நான் அவரை சிறிது கவனித்தேன், அவர் நரைத்த முடியுடன் அப்படியே செல்வதை நான் பார்த்தேன், அவர் தன் கையின் கீழ் ஒரு வேதாகமத்துடன், நன்றாக, சுற்றி நடந்து கொண்டிருந்தார்." "16 நான் சொன்னேன், ""ஐயா, இயேசுகிறிஸ்து உங்களை சுகமாக்கிவிட்டார். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக."" நான் மேலும் சொன்னேன், ""ஏனெனில் கர்த்தர் உரைக்கிறதாவது, நீங்கள் உங்கள் பார்வையைப் பெற்றுக்கொண்டீர்கள் என்பதை தேவன் எனக்குக் காண்பித்தார். உங்கள் ஜெபத்திற்குப் பதிலளிக்கப்பட்டது.""" "17 சரி, அவர்கள் அவரை அழைத்துச் சென்றார்கள், சில கணங்களில், இதோ அவர் மீண்டும் திரும்பி வந்தார். அவர் மீண்டும் வரிசையில் நின்றார், அவர் சொன்னார், ""ஐயா, நான் சுகமாகிவிட்டேன் என்று நீங்கள் என்னிடம் சொன்னீர்கள்."" அவர் சொன்னார், ""என்னால்—என்னால்—என்னால் எதையும் பார்க்க முடியவில்லை.""" "நான் சொன்னேன், ""'நீங்கள் சுகமாகி விட்டீர்கள்' என்று உங்களிடம் சொன்னது நான் அல்ல. 'நீங்கள் சுகமாகிவிட்டீர்கள்' என்று உங்களிடம் சொன்னது தேவன்.""" "சரி, அவர் சொன்னார், ""நான்—நான்—நான் நீங்கள் அதைச் சொல்வதைக் கேட்டேன்.""" "18 நான் சொன்னேன், ""சரி, அது சரிதான். அது என்னுடைய குரல், ஆனால் அதைச் செயல்படுத்துவது அவர்தான்."" நான் சொன்னேன், ""அவர் உங்களிடம் சொன்னது, நீங்கள் யார் என்று, மற்றும் பல, அது சரிதானே?"" " "அவர் சொன்னார், ""ஆம், ஐயா.""" "19 ""சரி,"" நான் சொன்னேன், ""வாழ்க்கையில் நீங்கள் என்னவாக இருந்தீர்கள் என்பதை அவர் அறிந்திருந்தால், நிச்சயமாக உங்கள் வாழ்க் கையில் நீங்கள் என்னவாக இருப்பீர்கள் என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். அந்த பகுதி உண்மையாக இருந்தால், உங்களுக்குத் தெரியும், மற்ற பகுதியும் உண்மையாக இருக்கும் என்று விசுவாசிப்பதற்கான விசுவாசத்தை நீங்கள் கொண்டிருப்பது போலத் தெரிகிறது.""" "அவர் சொன்னார், ""சரி, நான் சுகமாகியிருந்தால், என் கண்கள் திறக்கப் பட்டிருக்கும் போலத் தோன்றுகிறது.""" "நான் சொன்னேன், ""அதற்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை."" நான் சொன்னேன், ""நீங்கள் வெறும்... நீங்கள் விசுவாசிக்க வேண்டும்."" நான் சொன்னேன், ""விசுவாசித்துக் கொண்டே வீட்டிற்குப் போங்கள்.""" "20 சில கணங்களில், இதோ அவர் மறுபடியும் வந்தார், திரும்பவும், அந்த மனிதர் அவரை நடத்திக்கொண்டு வந்தார். அவர் சொன்னார், ""எனக்குப் புரியவில்லை. என் கண்கள் சுகமாகியிருந்தால், ஐயா... இப்போது, ஒரு பெண், ஒரு பெரிய கண்டமாலை அவளது தொண்டையை விட்டு நீங்கியதாகச் சொல்கிறார்கள்."" சொன்னார், ""ஏன் என் கண்கள் திறக்கப்படவில்லை?"" அவர் சொன்னார், ""நான் சுகமாகிவிட்டேன் என்று நீங்கள் என்னிடம் சொன்னீர்கள்.""" "நான் சொன்னேன், ""நீங்கள் என்னை விசுவாசிக்கிறீர்கள் என்று என்னிடம் சொன்னீர்கள்.""" "அவர் சொன்னார், ""நான் உங்களை விசுவாசிக்கத்தான் செய்கிறேன்.""" "நான் சொன்னேன், ""பின்னே, எதைக் குறித்து என்னைக் கேள்வி கேட்கிறீர்கள்?""" "அவர் சொன்னார், ""சரி, நான் சுகமாகியிருந்தால், நான் நினைக்கிறேன் என்னுடைய...""" "நான் சொன்னேன், ""'நீங்கள் சுகமாகி விட்டீர்கள்' என்று நான் உங்களிடம் சொன்னேன், ஏனென்றால் 'நீங்கள் சுகமாகி விட்டீர்கள்' என்று தேவனுடைய ஆவியானவர் என்னிடம் சொன்னார்.""" "அவர் சொன்னார், ""சரி, எனக்குப் புரியவில்லை."" சொன்னார், ""பாருங்கள், நான் ஒரு கத்தோலிக்கர்.""" "நான் சொன்னேன், ""நீங்கள் என்னவாக இருந்தீர்கள் என்பது எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது. நான் ஒருபோதும்... அது கேள்வியே அல்ல. அது வெறும்: உங்களுக்குச் சொல்லப்பட்டதை நீங்கள் கீழ்ப்படிந்து செய்ய வேண்டும் என்பதே.""" "அவர் சொன்னார், ""சரி, நான் என்ன செய்ய வேண்டும்?""" "நான் சொன்னேன், ""உங்கள் சுகத்திற்காக கர்த்தரைத் துதியுங்கள்."" நான் சொன்னேன், ""அது உங்களிடம் வரும்."" நான் சொன்னேன், ""அது வந்தாக வேண்டும்."" அவர் சொன்னார்..." 21 அநேக நேரங்களில் அது நடக்கிறது. பாருங்கள். கர்த்தருடைய தூதனானவர் ஒரு மாத காலத்திற்கு அந்த நபரைக் கடந்து செல்லாமல் இருக்கலாம். பார்கிறீர்களா? ஆனால் அது—அது நடந்தாக வேண்டும். கர்த்தர் அப்படிச் சொல்லியிருந்தால், அது நிகழ்ந்தாக வேண்டும். "22 ஆகவே, நான் சொன்னேன், ""'என்னைச் சுகமாக்கியதற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்' என்று மட்டும் சொல்லுங்கள்."" சரி இப்போது, இது... இப்போது, இன்றிரவு இங்குள்ள கத்தோலிக்க நண்பர்களே, எனக்கு கத்தோலிக்க உபதேசத்தைக் குறித்துக் கொஞ்சம் தெரியும். " பாதிரியார் சொல்வதை அவர்கள் செய்ய வேண்டும். எனவே, நான் அவரிடம் அதைச் சொன்னால், தான் அதைத்தான் செய்ய வேண்டும் என்று அவர் வெறுமனே—வெறுமனே நினைத்துக்கொண்டார். ஆகவே, அடுத்த நாள் தெருவெங்கும், அவர் சுகத்திற்காக கர்த்தரைத் துதித்துக் கொண்டிருந்தார். 23 அன்று இரவு, அவர் மீண்டும் ஆராதனைக்கு வந்தபோது, நாங்கள் ஒரு சிறிய பால்கனியுடன் கூடிய, ஒரு சிறிய இடத்தில் இருந்தோம், அதுபோல; அங்கே சுமார், ஓ, நான் நினைக்கிறேன், இருபத்தி ஐந்நூறு பேர் அமரக்கூடிய இடம் இருந்தது. "மேலும் அங்கே இருந்தது... அவர் அங்கே அமர்ந்துகொண்டு, ""எல்லோரும் அமைதியாக இருங்கள்"" என்று சத்தமிட்டார். அவர் எழுந்து நின்று, ""என்னை சுகமாக்கியதற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்"" என்று சத்தமிடுவார். மீண்டும் உட்கார்ந்து கொள்வார். " "நான் மீண்டும் பிரசங்கிக்கத் தொடங்கும் நேரத்தில், அவர் சொல்வார், ""எல்லோரும் அமைதியாக இருங்கள். என்னை சுகமாக் கியதற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்."" சரி, நான் தொடங்கும் ஒவ்வொரு முறையும் அவர் என்னைத் தொந்தரவு செய்வார்..." "24 ""சரி, அவரை விட்டுவிடுங்கள்,"" நான் சொன்னேன், ""வெறுமனே,"" வரவேற்பாளர்கள் அவரைத் தடுத்து நிறுத்தப் போவார்கள், நான் சொன்னேன், ""அவரை விட்டுவிடுங்கள், அதைத் தான் நான் அவரைச் செய்யச் சொன்னேன்."" ஆகவே, அவர் அதைத் தொடர்ந்து செய்துகொண்டிருந்தார்." 25 சரி, கூட்டம் முடிந்தது, அது மூன்று நாள் கூட்டம் மட்டுமே, அந்த—கூட்டம் முடிந்தது. நான்—நான் சென்ற பிறகு அது சில, ஓ, ஒருவேளை, ஒரு மாதமாக இருக்கலாம் என்று எண்ணுகிறேன், அவர் வசித்த ஃபோர்ட் வெய்னுக்கு அருகில் உள்ள அங்கே ஒரு சிறிய பட்டணத்தில், அவர் பேப்பர்களை விற்றுக் கொண்டிருந்தார். "எனவே, அவர் வீதியில் நின்று கொண்டு சத்தமிடுவார், ""எக்ஸ்ட்ரா! என்னை சுகமாக்கியதற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம். எக்ஸ்ட்ரா! என்னை சுகமாக்கியதற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.""" "அந்த முதியவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று மக்கள் நினைத்தார்கள். ஆகையால், அவர்கள்—அவர்கள் சொன்னார்கள், ""இது, ஏன்—ஏன், இது பயங்கரமாக இருந்தது.""" 26 எனவே அவர் ஒரு முடிதிருத்தும் கடைக்குச் சென்றார் (அவருடன் பேப்பர்களை விற்ற ஒரு சிறுவன், அவரை அங்கே, முடிதிருத்துவதற்காக அழைத்துக் கொண்டு சென்றான்) மற்றும்—மற்றும் சவரம் செய்து கொள்வதற்காக. அங்கே சுமார் இருபத்திரண்டு வயதுள்ள ஒரு சிறிய முடிதிருத்துவோர் இருந்தார், அவருக்கு எல்லாவற்றைப் பற்றியும் அத்தனை மூலைமுடுக்குகளும் தெரியும், உங்களுக்குத் தெரியுமே. "எனவே, அவர் அந்த—முதியவருக்குச் சவரம் செய்ய ஆரம்பித்தார், பாதி தாடியைச் சவரம் செய்திருந்தார். சொன்னார், ""சொல் லுங்கள், தாத்தா, அந்தத் தெய்வீக சுகமளிப்பவர் அங்கே வந்திருந்தபோது, நீங்கள் அவரிடம் சென்றிருந்தீர்கள் என்று நான் கேள்விப் பட்டேன்.""" "சொன்னார், ""ஆம், நான் சென்றிருந்தேன்.""" "சொன்னார், ""கர்த்தர் உங்களை சுகமாக்கினார் என்று கேள்விப்பட்டேன்.""" "27 அவர் சொன்னார், ""ஆம், கர்த்தருக்கு ஸ்தோத்திரம், அவர் என்னை சுகமாக்கினார்."" அப்பொழுது அவருடைய கண்கள் திறக்கப் பட்டன. கழுத்தைச் சுற்றி ஒரு துண்டுடன், பாதி சவரம் செய்யப்பட்ட நிலையில் அந்த நாற்காலியிலிருந்து அவர் குதித்தெழுந்து வெளி யேறினார், முடிதிருத்துவோர் சவரக்கத்தியுடன் அவருக்குப் பின்னால் ஓடினார்; " தன் முழு பலத்தோடும் கத்திக்கொண்டே அவர் வீதிவழியே சென்றார்; இப்போது, அவரால் முழுமையாகப் பார்க்க முடியவில்லை. ஆனால் இன்றிரவு, அந்த முதியவர் தெய்வீக சுகமளித் தலைப் குறித்து பிரசங்கிக்கிறார், இப்போது, இன்றிரவு. ஆம், ஐயா. "28 என்ன? அவருடைய சாட்சி எதிர்மறையானதாக இருக்கவில்லை, என்ன நடந்தாலும், அது இன்னும் நேர்மறை யானதாகவே இருந்தது. அவர் அதை விசுவாசித்தார். இன்றிரவு மிச்சிகனில், சுற்றியுள்ள ஏதோ ஒரு இடத்தில் அவர் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறார். அவர் சொல்லுகிறார், ""நான்... எனக்குத் தெரிந்த ஒரே காரியம் அதை வெறுமனே விசுவாசிப்பதுதான். அதைத்தான் நான் செய்தேன்."" சில நேரங்களில், தேவன், அந்த வழியில்..." 29 சமீபத்தில் இங்கே, இரண்டு பெண்கள், நான் சில இரவுகளுக்கு முன்பு இங்கே இதைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன், ஏனென்றால் அதைக் குறித்து எனக்கு ஒரு கடிதம் வந்தது, அவர்கள் கூட்டத்திற்கு வந்திருந்தார்கள். ஒரு பெண், கூட்டத்தில் வயிற்றுப் பிரச்சனையுடன் வந்தபோது சொன்னார். 30 இப்போது அதைக் கவனியுங்கள், அது கர்த்தருடைய நாமத்தைப் பேசும். அது என்னவென்றும், என்ன நடக்கப்போகிறது என்றும் உங்களிடம் சொல்லும். பாருங்கள். அது சொல்லாவிட்டால், எனக்குத் தெரியாது. அது சொல்வதை மட்டுமே என்னால் சொல்ல முடியும். என்னால் அதை உருவாக்க முடியாது, அது தேவன். 31 ஆகவே அது அவளிடம் சொன்னது, அவளுக்கு இருந்த வயிற்றுப் பிரச்சனை யிலிருந்து அவள் குணமடையப்போகிறாள் என்று. அது தொண்டையில் கட்டியிருந்த மற்றொரு பெண்ணிடம், கர்த்தருடைய நாமத்தினாலே, அது—அது—அது அவளை விட்டு நீங்கப்போகிறது என்று சொன்னது. ஆகவே, அவள், நான் அவளை வீட்டிற்குப் போகச் சொன்னேன், அவள் தனக்கு வேண்டியதை சாப்பிடச் சொன்னதாகச் சொன்னாள். சரி, அவள் அதை முயற்சித்தாள். ஏன், ஆச்சரியமே, அவள் மரிக்க விரும்பினாள். அவள் சாப்பிட முயற்சிப்பாள், அவள் வாந்தியெடுப்பாள், மேலும் எல்லாம். 32 சரி, வாரங்கள் கடந்தன, மூன்று அல்லது நான்கு வாரங்கள். ஒரு நாள் காலையில், குடும்பத்தினர் வேலைக்குச் சென்றுவிட்டார்கள், குழந்தைகள் பள்ளிக்குச் சென்றுவிட்டார்கள், அவள் மிகவும் பசியாக இருந்தாள். தனக்குள் ஏதோ ஒரு குளிர்ச்சியான ஒன்று கடந்து செல்வதைப் போல உணர்ந்ததாக அவள் கூறினாள். அவள் முயற்சித்தாள், சிறிது டோஸ்ட் சாப்பிட்டாள்; அது வெளியே வரவில்லை. அவள் சிறிது ஓட்ஸ் சாப்பிட்டாள், அது வரவில்லை. ஒரு கப் காபி குடித்தாள். ஓ, ஆச்சரியமே, அவள் நன்றாகவே இருந்தாள். ஆகவே, வீதியின் கீழே உள்ள தன் அண்டை வீட்டுக்காரரிடம், என்ன நடந்தது என்று ஓடிச்சென்று சொல்லலாம் என்று அவள் நினைத்தாள். 33 ஆகவே, அவள் இன்னும் தன் சுகத்தைக் குறித்து சாட்சி சொல்லிக்கொண்டிருக்கிறாள், அவளால் சாப்பிட முடியாது என்பது யாருக்கும் தெரியாது, அது அவளுக்கு மட்டுமே தெரியும். அவள் தன்னால் முடிந்தவரை முயற்சி செய்து கொண்டிருந்தாள், ஆனால் அவள் அதைப் பெற்றுக்கொள்வாள் என்று சொன்னாள். "ஆகவே அவர் சொன்னார், ""நான் என்னவாக இருந்தேன் என்பதையும், என்ன, நான் எப்படி வியாதிப்பட்டேன் என்பதையும், எது என்னை வியாதிப்படுத்தியது என்பதையும் தேவன் ஏவுதலினால் எனக்குச் சொல்லக்கூடுமானால், நான் சுகமாகப் போகிறேன் என்று என்னிடம் சொல்லியிருந்தால், நான் அதை விசுவா சிக்கிறேன்."" அதுதான் வழி. அது சரிதான். அவளுக்கு அந்த எண்ணம் இருந்தது." 34 அதைப் பற்றி தன் தோழியிடம் சொல்வதற்காக அவள் வீதியில் ஓடினாள், வீதியில் சில வீடுகள் தள்ளி. அவள் வீதி வழியே சென்றாள், அந்த வீட்டிற்குள், அவள் அதைப் பற்றி அவளிடம் சொல்லப்போனாள். யாரோ ஒருவர் முழு பலத்தோடு அலறுவதை அவள் கேட்டாள், அந்தப் பெண் தரையின் நடுவில் இருந்தாள், அன்று காலையில் அந்தக் கட்டி அவளது தொண்டையை விட்டு நீங்கிவிட்டது, அவள் தன் முழு பலத்தோடு அலறிக் கொண்டிருந்தாள். 35 என்ன நடந்திருந்தது? அந்த காரியங்களை வைத்த, தேவனிடமிருந்து வார்த்தையைக் கொண்டிருந்த, உதடுகளின் வழியாய் பேசி, என்ன இருக்கிறது என்று சொல்லி, அது எப்படி இருக்கப்போகிறது என்று அவர்களிடம் சொன்ன அதே தேவ தூதனானவர், அவர் அந்த ஆசீர்வாதத்தை அறிவித்திருந்த அந்த மக்களைத் தேடிக்கொண்டு, அன்று காலையில் அந்தப் பகுதியின் வழியாய்க் கடந்து சென்றார். அது அதைத் தீர்த்துவைத்தது. பார்க்கிறீர்களா? பாருங்கள், நீங்கள் விரும்பும் நேரத்தில் அவர்களால் உங்களிடம் சரியாக வர முடியாது. ஆனால் அவர்கள் ஏதாவது சொன்னால்... 36 சரி பாருங்கள், தானியேல், ஒரு தூதனானவர் இருந்தார், தானியேலைப் பின்பற்றினார். அது சரியா? ஒரு முறை, அவர் அவரை நோக்கிக் கூப்பிட்ட பிறகு, இருபத்தியோரு நாட்களாக, அந்த தூதனால் அவரிடம் வரமுடியவில்லை என்று நான் நம்புகிறேன். அது சரியா? இருபத்தியோரு நாட்கள், அவர் தடுக்கப்பட்டிருந்தார், ஆனால் அவர் அங்கே வந்து சேர்ந்தார். கவலைப்படாதீர்கள், அவர் அங்கே இருப்பார், வெறுமனே... 37 இப்போது, இந்த வெண்கலச் சர்ப்பம்... இப்போது, இதைத் தொடர, இது மிச்சிகனில் உள்ள பெண்டன் ஹார்பரில், தாவீதின் வீட்டில், இந்த மனிதருக்கு அநேக தர்மங்களைச் செய்திருந்த ஒரு யூதன், என்னை ஒரு நேர்காணலுக்காக அங்கே அழைத்திருந்தார். சரி, எனக்கு சில மணிநேரங்கள் இருந்தன, நாங்கள் அங்கே பயணம் செய்தோம். அந்த முதியவரும் நானும், ஊஞ்சலில் அமர்ந்தி ருந்தோம், இந்த ரபி வெளியே வந்தார். நிச்சயமாக, அவர் தனது தொப்பியை கழற்றவில்லை, அவர் தனது தொப்பியை வைத்தபடியே இருந்தார், ஒரு வாலிபன், அவரது முப்பதுகளில், கருமையான தாடியைக் கொண்டிருந்தார். "அவர் கேட்டார், ""நீங்கள் திரு. பிரன்ஹாம் தானா?""" "நான் சொன்னேன், ""ஆம், ஐயா.""" "அவர் சொன்னார், ""எந்த அதிகாரத்தினால் நீங்கள் ஜான் ரைனின் கண்களைத் திறந்தீர்கள்?""" "நான் சொன்னேன், ""நான் ஒருபோதும் அவருடைய கண்களைத் திறக்கவில்லை.""" "அவர் சொன்னார், ""சரி, எது அவருடைய கண்களைத் திறந்தது?""" "நான் சொன்னேன், ""தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து, அவருடைய கண்களைத் திறந்தார்.""" "அவர் சொன்னார், ""முட்டாள்தனம்."" அவர் சொன்னார், ""இயேசு கிறிஸ்துவும் இல்லை, அவர் தேவனுடைய குமாரனும் இல்லை.""" "நான் சொன்னேன், ""சரி, ஜானின் கண்கள் திறக்கப்பட்டுள்ளன, அல்லவா?""" "அவர் சொன்னார், ""ஆம், அது உண்மைதான்.""" "38 நான் சொன்னேன், ""சரி, நான் அவருக்காக ஜெபித்தபோது, தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தைப் பயன்படுத்தினேன்."" நான் சொன்னேன், ""அந்த நாமத்தினாலும், அந்த வல்லமையினாலும்தான் பார்வை வந்தது.""" "அவர் சொன்னார், ""உங்கள் அறியாமையை யெகோவா கண்டும் காணாமல் விட்டுவிட்டார்.""" "நான் சொன்னேன், ""சரி, ஒருவேளை அவர் அப்படிச் செய்திருக்கலாம்."" நான் சொன்னேன், ""ஆனால் ஜானின் கண்கள் திறக்கப்பட்டுள்ளன.""" "39 அவர் சொன்னார், ""இயேசு,"" சொன்னார், ""அவர் ஒரு திருடனைத் தவிர வேறொன்று மில்லை. அவர் சோளக்கொல்லையின் வழியே சென்று அவர்—அவர்—அவர்—அவர் சோளக் கதிர்களைப் பறித்து அவற்றைச் சாப்பிட்டார்."" சொன்னார், ""அது சட்டவிரோதமானது. அவர் அப்படிச் செய்திருக்கக் கூடாது."" சொன்னார், ""அவர் ஒரு திருடனைத் தவிர வேறொன்றுமில்லை.""" "40 நான் சொன்னேன், ""சரி இப்போது, அவர் ஓய்வுநாளின் ஆண்டவராக இருந்தார்."" நான் சொன்னேன், ""நீங்கள் அவரை 'ஒரு திருடன்' என்று அழைப்பீர்கள், உங்கள் சொந்த சட்டங்களே அவரை நியாயப்படுத்தின."" " "நான் சொன்னேன், ""ஒருவன் சோளக் கொல்லையின் வழியே சென்றால், அவன் தனக்கு வேண்டியதை சாப்பிடலாம்; ஆனால் எதையும் பையில் போட்டு, எடுத்துக்கொண்டு போகக்கூடாது என்று உங்கள் சொந்த சட்டங்களிலேயே எழுதப்பட்டுள்ளது."" " "அது சரிதான். அதுதான்—அதுதான் சட்டம். அவர் தமக்கு வேண்டியதை சாப்பிடலாம். நான் சொன்னேன், ""அவர் ஒருபோதும் எந்தச் சட்டங்களையும் மீறவில்லை.""" """ஓ,"" அவர் சொன்னார், ""அவர் தன்னைத் தானே தேவனாக்கிக்கொண்டார், அவர் ஓய்வு நாளை மீறினார்.""" "நான் சொன்னேன், ""அவர் ஓய்வுநாளின் ஆண்டவராக இருந்தார், மேலும் அவரே தேவனாகவும் இருந்தார்.""" 41 அதற்கு அவர், “ஓ, இதெல்லாம் அபத்தம்” என்றார். அவர்—அவர், “நீங்கள்—நீங்கள் புறஜாதியார் எல்லோரும் உங்கள் மனதிலே குழம்பிப் போயிருக்கிறீர்கள்” என்றார். அவர், “நீங்கள்…” அவர், “நீங்கள்—நீங்கள்—நீங்கள் புறஜாதியார் தேவனை மூன்று துண்டுகளாக வெட்டி, அவரை ஒரு யூதனுக்குக் கொடுக்க முடியாது” என்றார். “அது உங்களுக்குத் தெரியும்” என்றார். “நீங்கள் எல்லாரும், ‘எங்கள் தேவன்’ என்று சொல்லு கிறீர்கள்” என்றார். மேலும், “உங்களுக்கு மூன்று தேவர்கள் இருக்கிறார்கள், ‘பிதாவாகிய தேவன், குமாரன், மற்றும் பரிசுத்த ஆவியானவர்’” என்றார். “உங்களுக்கு மூன்று தேவர்கள் இருக்கிறார்கள்” என்றார். “அவர்களில் யார் உங்கள் தேவன்?” என்றார். நான், “அவர்கள் மூவரும் எங்கள் தேவன்தான்” என்றேன். அதற்கு அவர், “அப்படியானால், நீங்கள் எல்லாரும் பைத்தியக்காரர்கள்” என்றார். அதற்கு நான், “சரி இப்போது, பாருங்கள், நான் உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன்” என்றேன். நான், “நீங்கள், ‘இயேசுதான் மேசியா என்பதை நம்பவில்லையா’?” என்றேன். அவர், “இல்லை, ஐயா” என்றார். நான், “ரபீ, நீங்கள் தீர்க்கதரிசிகளை நம்புகிறீர்கள், அல்லவா?” என்றேன். அவர், “ஆம்” என்றார். 42 நான், “ஏசாயா 9:6-ல், ‘நமக்கு ஒரு குமாரன் பிறந்தார், கொடுக்கப்பட்டார்: கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்: அவர் நாமம் ஆலோசனைக்கர்த்தா எனப்படும்’ என்று சொல்லப்பட்டிருக்கிறதே” என்றேன். நான், “தீர்க்கதரிசி யாரைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தார்?” என்றேன். “அது மேசியாதான். அவர்தான் மேசியா.” நான், “அப்படியானால் மேசியா ஒரு குழந்தையாகப் பிறக்க வேண்டும். அது சரிதானே?” என்றேன். “ஓ, ஆம். ஆம், அது சரிதான்.” நான், “அப்படியானால், மேசியாவுக்கும் தேவனுக்கும் என்ன உறவு?” என்றேன். அவர், “அவரே தேவன்” என்றார். நான், “அது சரிதான்” என்றேன். “அவர்—அவரே தேவனாக இருப்பார்.” 43 நான், “அது சரிதான். அவர்தான்” என்றேன். நான், “மூன்று தேவர்கள், மூன்று வித்தியாசமான நபர்கள் இருக்கிறார்கள் என்று நாங்கள் உங்களுக்குச் சொல்ல முயற்சிக்க வில்லை” என்றேன். நான், “தேவன் ஒரு மூன்று அடி அளவுவுகோலைப் (scale) போன்றவர். துல்லியமாக அப்படித்தான்” என்றேன். நான், “தேவனுடைய தூதனானவர்…மோசேயை வனாந்தரத்தின் வழியாய் நடத்தினாரே, அந்த அக்கினி ஸ்தம்பம், அது யாராக இருந்தது?” என்றேன். அவர், “அது யெகோவா” என்றார். 44 நான், “சரிதான். பின்பு, அவர் இருந்த மலையைக்கூட யாரும் தொட முடியவில்லை” என்றேன். மேலும் நான், “அது யெகோவா; அவரை ஒருவரும் தொட முடியவில்லை. அவர் மலையின்மேல் இறங்கி வந்தபோது, அது முழுவதும் அக்கினியாக இருந்தது, அவர்தானே கட்டளைகளை எழுதினார்?” என்றேன். “ஆம், அது யெகோவாதான்.” 45 நான், “அப்படியானால், தேவன் தம்மை ஒரு கன்னிகையின் மூலம் பிறந்த சரீரத்திற்குள் வெளிப்படுத்தினார். பார்க்கிறீர்களா? அதாவது, மேசியா ஒரு சிறிய பெண்ணின்மேல் நிழலிட்டு; அவளுடைய கர்ப்பத்தில், தேவனுடைய குமாரனைக் கொண்டுவர ஒரு இரத்த அணுவை சிருஷ்டித்தார்” என்றேன். நான், “பின்பு தேவன் வந்து அவருக்குள் வாசம்பண்ணினார். தேவன் உலகத்தை தம்மோடே ஒப்புரவாக்கிக் கொண்டு கிறிஸ்துவுக்குள் இருந்தார்” என்றேன். நான், “அதை நீங்கள் நம்புகிறீர்களா?” என்றேன். “இல்லை, எனக்குப் புரியவில்லை…” நான், “சரி, அவர் அப்படித்தான் இருந்தார். அவர் ஒரு—அவர் ஒரு மூன்று தன்மையுள்ள (threefold) நபராக இருந்தார்” என்றேன். 46 கவனியுங்கள். பின்பு நான், “அப்பொழுது நீங்கள் அவரைத் தொட முடிந்தது. ஆனால் அவர் கன்னிகையிடம் பிறந்த சரீரமாக இருந்தார். அவர் என்ன செய்கிறார்? மனிதர்களின் இருதயங்களுக்குள் இறங்கிவரத் தம் வழியைச் செயல்படுத்துகிறார்” என்றேன். நான், “பின்பு அவர் திரும்பிச் சென்றபோது, ‘நான் தேவனிடத்திலிருந்து வந்தேன், மீண்டும் தேவனிடத்திற்கே போகிறேன்; இந்தச் சரீரத்தைப் பலியிடுவதின் மூலம்,’ அது அவருடைய குமாரனாக இருந்தது, தேவன் தம் குமாரனுக்குள் வாழ்ந்துகொண்டு, ‘பாவமன்னிப் புக்காக இந்தச் சரீரத்தைப் பலியாக ஒப்புக்கொடுத்தார்’” என்று சொன்னேன். மேலும் நான், “அதன் மூலமாக, பாலுறவின்றிப் பிறந்த அவருடைய சரீரத்தின் இரத்தத்தின் மூலமாக, பாலுறவு மூலமான நமது பிறப்பிலிருந்து நம்மை மீட்டு, நம்மை ஒரு உறவுக்குள் கொண்டுவருகிறார். அவர் மறுபடியும் பரிசுத்த ஆவியானவரின் ரூபத்தில் வந்து நமக்குள் வாழ்கிறார். அதே தேவன்தான், முழு வழியிலும், அதே காரியம்தான்” என்றேன். நான், “அவர் அப்படி ஆக வேண்டி யதிருந்தது…” என்றேன். நான், “பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவரின் நாமத்திலே ஞானஸ்நானம் கொடுக்க நாம் கட்டளையிடப்பட்டதற்குக் காரணம் அதுதான், ஏனென்றால் பிதாவின் காலம், குமாரனின் காலம், பரிசுத்த ஆவியானவரின் காலம் (dispensation) ஆகியவற்றில் இருப்பது அதே தேவன்தான். அது முற்றிலும்… நமக்கு மூன்று தேவர்கள் இல்லை, மூன்று காலங்களில் நமக்கு ஒரே தேவன்தான் இருக்கிறார், அது சரிதான், தேவனுடைய மூன்று தன்மைகளில், பிதாவாகிய தேவன், குமாரன், மற்றும் பரிசுத்த ஆவியானவராக இருக்கிறார்” என்றேன். நான்… 47 அந்த யூதர் அதைக் கண்டார். சீர்திருத்தக் காலத்தில் கிறிஸ்தவர்களிடமிருந்து அது சரிசெய்யப்படாததால், அதுவே எப்போதும்—எப்போதும் யூதருக்கு ஒரு இடறலாக இருந்து வந்திருக்கிறது; பின்பு—பின்பு அதில்தான், யூதர் நெடுகிலும் இடறலடைந்தார். அவர் அதைக் கண்டார், அவர் அழ ஆரம்பித்தார். அவர் திரும்பிப் பார்த்து, “தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார்” என்றார். 48 நான், “ரபீ, உங்களுக்குத் தெரியும்; அதை நீங்கள் நம்புகிறீர்கள்” என்றேன். நான், “தேவன் தமது இரக்கத்தினால், வெகு உயரே அங்கிருந்து, மனிதர்களுக்குள் வாழ்வதற்கும், ஏதேன் தோட்டத்தில் அவர் செய்ததுபோலவே மீண்டும் மனிதர்களுடன் ஐக்கியம் கொள்வதற்கும் கீழே இறங்கி வரும்படிக்கு, அவர் தமது வழியைச் செயல்படுத்தி, காலங்கள் தோறும் பாவத்தின் பாதையைச் சுத்திகரிக்க வேண்டியதிருந்தது” என்றேன். அல்லேலூயா. 49 அது கிருபையில்லையென்றால், வேறு எது கிருபை என்று எனக்குத் தெரியவில்லை, சகோதரனே. எப்படி தேவன், யெகோவா, தம்மைத்தாமே கொண்டுவந்து, அங்கே இருந்த அந்த மகா பெரிய நபர், (ஓ, அவர் தம்மை எவ்வளவாய்த் தாழ்த்தினார்) கீழே இறங்கி வந்து, தமக்கென்று சொந்த சரீரத்தை சிருஷ்டித்து, இங்கே நமக்கிடையில் ஒரு வாசஸ்தலத்தில் வாழ்வதற்காக (இம்மானுவேல், நம்முடன் நடப்பதற்காக, “தேவன் உலகத்தை தம்மோடே ஒப்புரவாக்கிக் கொண்டு கிறிஸ்துவுக்குள் இருந்தார்”). மேலும் தேவனுடைய குமாரனாகிய, மாம்சமான தமது சரீரத்தைக் கொடுப்பதின் மூலமாக வந்தார். இயேசு தேவனுடைய குமாரனாக இருந்தார், அவரை அவர் இங்கே பூமியில் கொண்டிருந்தார், மேலும் அவர் ஒரு நபராக இந்தக் குமாரனுக்குள் வாசம்செய்து, தம்மை வெளிப்படுத்தினார். இயேசு, “கிரியைகளைச் செய்கிறது நானல்ல” (தனிநபரான, இயேசு), ஆனால் அவர், “என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்” என்று சொன்னார். 50 இப்போது, இது இப்படித்தான் இருக்கிறது: பிதாவாகிய தேவன் முதல் ஆறு, அல்லது முதல் பன்னிரண்டு அங்குலங்கள் (inches); குமாரனாகிய தேவன் இரண்டாவது பன்னிரண்டு அங்குலங்கள்; மற்றும் பரிசுத்த ஆவியானவராகிய தேவன் மூன்றாவது பன்னிரண்டு அங்குலங்கள். இது ஒரே அளவு கோல், ஒரே மூன்று அடி அளவுவுகோல், ஆனால் ஒவ்வொரு காலத்திலும் (dispensation) அதே தேவன்தான், பார்க்கிறீர்களா, அதே தேவன்தான். இப்பொழுது அவர், இன்றைக்கு மனிதர்களுக்குள் கிரியை செய்து கொண்டிருக்கிறார். அதை நீங்கள் நம்புகிறீர்களா? தேவன் மனிதர்களுக்குள் வாழ்கிறார், இன்றிரவு இங்கே நம்முடனேயே இருக்கிறார். 51 தேவனுடைய அன்பு எவ்விதமாகத் தம்மை வெளிப்படுத்தி, கீழே இறங்கி வந்திருக்கிறது. ஓ, கொண்டுவர… நான்… ஒரு பரிசுத்த தேவன் எப்படிக் கீழே இறங்கி வந்து, மனிதகுலத்திற்குள் பிரவேசித்து, மனிதர் களுக்குள் வாழ்வதற்காக, தம்மைத்தாமே வெளிப் படுத்தி, தமது வழியைச் செயல் படுத்துவார் என்பது—என்பது என்னால் புரிந்து கொள்ள முடிவதற்கும் மேலானதாக இருக்கிறது. “இன்னுஞ்சற்று நேரத்திலே உலகம் என்னைக் காணாது;” ஆவியானவர் இயேசுவின் மூலமாகப் பேசுகிறார், “நீங்களோ என்னைக் காண்பீர்கள்: நான் உலகத்தின் முடிவுபரியந்தமும் உங்களுட னேகூட, உங்களுக்குள்ளும் இருப்பேன்.” இது சரிதானே? இப்போது, விசுவாசியாதவன் வெளியே வந்து, “அப்படிப்பட்ட காரியம் எதுவுமே இல்லை” என்று சொல்கிறான். 52 அவரைப் பாருங்கள், அவர் இங்கே பூமியில் இருந்தபோது, அவர் (இயேசு), தம்மை ஒரு பெரிய நபர் என்று உரிமை பாராட்ட வில்லை. தாம் “தேவனுடைய குமாரன்” என்று அவர் சொன்னார். கிணற்றருகே இருந்த பெண்ணிடம் அவர் அதைச் சொன்னார். 53 மற்றொரு நாள் ஒருவர் என்னிடம் சொல்ல முயற்சித்தார், “இயேசு ஒருபோதும் தம்மை ‘தேவனுடைய குமாரன்’ என்று சொல்லவே இல்லை.” அவர் நிச்சயமாகவே சொன்னார். அவர் தம்மை “தேவனுடைய குமாரன்” என்று சொன்னார். ஓ, கிணற்றருகே இருந்த பெண்ணிடம் சொன்னார். மேசியா வருவார் என்பது தனக்குத் தெரியும் என்று அவள் சொன்னாள். 54 அவர், “உன்னுடனே பேசுகிற நானே அவர்” என்றார். அவர் தேவனுடைய குமாரனாக இருந்தார். மேலும் அவர் சொன்னார்—மேலும் அவர் சொன்னார், அவர் இங்கே பூமியில் இருந்தபோது, தம்மை எந்தவொரு பெரிய நபராகவும் உரிமை பாராட்டவில்லை; அவர் தாழ்மையாக இருந்தார். அவர் பரம பிதாவுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்; தேவன் தமக்குச் சொன்ன படியே அவர் எங்கும் சுற்றித்திரிந்து செய்தார். அவர் தரிசனங்களைக் காண முடிந்தது. அவர் நினைத்தார்… மக்களின் மனதிலுள்ள நினைவுகளை அவர் அறிந்திருந்தார்; அவர்களுக்கு என்ன பிரச்சனை என்பதை அவர் அறிந்திருந்தார். எது நடக்கப் போகிறது என்பதை அது நடப்பதற்கு முன்பாகவே தேவன் அவருக்குக் காண்பிப்பார், அதை அவர் மக்களுக்குச் சொல்வார். 55 லாசருவின் உயிர்த்தெழுதலைப் பாருங்கள், அவர் தமது நண்பனின் வீட்டை விட்டுச் சென்றபோது; என்ன நடக்கப் போகிறது என்பதைப் பிதா அவருக்குக் காண்பித்திருந்தார். மூன்று நாட்கள் கடந்தன, அவர், “லாசரு நித்திரையடைந்திருக்கிறான்” என்றார். அந்தக் காரணத்தினால்தான் இவ்வளவு நேரத்திற்குள், லாசரு மரித்திருப்பான் என்பதை அவர் அறிந்தி ருந்தார். ஆகவே, அவர், “நான் அவனை எழுப்பப் போகிறேன்” என்றார். அது சரிதானே? “நான் அவனை எழுப்பப்போகிறேன்.” இப்போது கவனியுங்கள். 56 அவர் கல்லறையண்டைக்குச் சென்ற போது, அவர், “பிதாவே, நீர் ஏற்கனவே… அதற்காக உம்மை ஸ்தோத்தரிக்கிறேன்; ஆனால் சூழ்ந்துநிற்கும் இவர்களினிமித்தமாக இதைச் சொன்னேன்” என்றார். பார்க்கிறீர்களா? “சூழ்ந்துநிற்கிற இவர்களுக்காகவே, ஜெபிக்க வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணமாக நான் இதைச் செய்தேன். ஆனால் என்ன நடக்கப்போகிறது என்பது எனக்குத் தெரியும், ஏனென்றால் நீர் ஏற்கனவே எனக்குக் காண்பித்து விட்டீர்.” பின்பு அவர், “லாசருவே, வெளியே வா” என்றார். நான்கு நாட்களாக மரித்துப்போயிருந்த ஒரு மனிதன், மீண்டும் உயிர் பெற்று வந்தான். பார்க்கிறீர்களா? 57 அவருடைய ஊழியம் முழுவதிலும் அவர் மூன்று பேரை மட்டுமே உயிரோடு எழுப்பினார், அது நம்மிடம் பதிவாகியுள்ளது, மூன்று பேர்; மூன்று என்பது ஒரு உறுதிப்படுத்தல்: “இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினால் சகல காரியங்களும் நிலைவரப்படும்.” 58 இப்போது, இங்கே கவனியுங்கள், மோசே… இந்த ஜனங்கள் தேவனுக்கும், மோசேக்கும் விரோதமாகப் பாவஞ்செய்தபோது, அவர்கள் தேவனுக்கு விரோதமாகப் பேசியதன் மூலமும், அவருடைய தலைவனுக்கு விரோதமாகப் பேசியதன் மூலமும் தேவனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்தார்கள். ‘ இப்பொழுது, நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், தேவன் மோசேயிடம் போய் ஒன்றைச் செய்யச் சொன்னார்: ஒரு சர்ப்பத்தை உண்டாக்கி அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவைக்கச் சொன்னார். இப்போது மரணத்தைக் கடித்தது சர்ப்பம்தான். அவர் அதை வெண்கலத்தினால் உண்டாக்கி, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவைத்தார். 59 இப்போது அது எதைக் குறிக்கிறது: இப்போது, முதல் காரியம், ஜனங்கள் பாவஞ்செய்தார்கள், வியாதியால் மரித்துக் கொண்டிருந்தார்கள். இப்போது, இந்தக் கூட்டுக் காரணத்தை (compound reason) கவனியுங்கள். அவர்கள்… பாவஞ்செய்தார்கள், பாவத்தின் காரணமாக வியாதியால் மரித்துக் கொண்டி ருந்தார்கள்; எல்லாப் பாவமும் நேரடியாக, அல்லது, நேரடியாகக் காரணமாயிருக்கும்… மாறாக, எல்லா வியாதியும் பாவத்தினாலேயே ஏற்படுகிறது. நமக்கு எந்தப் பாவமும் வருவதற்கு முன்பு, நமக்கு எந்த வியாதியும் இல்லை, வியாதி என்பது பாவத்தின் ஒரு தன்மையாகும் (attribute); ஒருவேளை நீங்கள் செய்ததாக இருக்காது, ஆனால் உங்களுக்கு முன்பாக யாரோ ஒருவர் செய்ததால், சுதந்தரிக்கப்பட்டிருக்கலாம். வியாதி என்பது பாவத்தின் ஒரு தன்மை. 60 இப்போது, தேவன் இதை—இந்த நிழலில் (type) காண்பிக்கிறார்: இப்போது முதல் காரியம், அந்தக் கம்பம் “சிலுவையை,” மரத்தைக் குறிக்கிறது. சர்ப்பம் ஒரு சர்ப்பமாக இருப்பதால், அது “ஏற்கனவே நியாயந் தீர்க்கப்பட்ட பாவத்தைக்” குறிக்கிறது, ஏனென்றால் தேவன் ஏதேன் தோட்டத்தில் சர்ப்பத்தை நியாயந்தீர்த்திருந்தார். ஆனால் வெண்கலம் “தெய்வீக நியாயத்தீர்ப்பைக்” குறிக்கிறது, அது வெண்கலத் தொட்டியைப் போல இருந்தது. எலியாவின் நாட்களில், அவன் வெளியே பார்த்து, “வானம் வெண்கலத்தைப் போலத் தெரிகிறது” என்றான். தேசம் முழுவதிலும் தெய்வீக நியாயத்தீர்ப்பு, மழையில்லை; தெய்வீக நியாயத்தீர்ப்பு. 61 மேலும் இந்த ஜனங்கள் அந்த வெண்கலச் சர்ப்பத்தைப் பார்க்க வேண்டும் அல்லது நோக்க வேண்டும் என்பதைக் கவனியுங்கள்; சர்ப்பத்தால் அவர்களுக்காக ஜெபிக்க முடியாது, அவர்கள் வெறுமனே—பார்த்துப் பிழைக்க வேண்டும். மேலும் அது ஒரு கூட்டுக் காரணத்திற்காகவே இருந்தது: அவர்களின் பாவத்தை அகற்றுவது, அவர்களின் வியாதியைக் குணமாக்குவது. 62 இங்கே இயேசு பேசும்போது, “மோசே வனாந்தரத்தில் வெண்கலச் சர்ப்பத்தை உயர்த்தினது போல, அதே காரணத்திற்காக மனுஷகுமாரனும் உயர்த்தப்பட வேண்டும்” என்றார். 63 இப்போது, நிழல் (type) குணமாக் குதலைச் செய்ததென்றால், நிஜம் (antitype) எப்படிப்பட்டதாக இருக்கும்? வெண்கலச் சர்ப்பம், அந்த நிழல், குணமாக்குதலைச் செய்ததென்றால், கிறிஸ்துவை நோக்கிப் பார்ப்பது என்ன செய்யும்? பார்த்துப் பிழைத்துக்கொள், என் சகோதரனே, பிழைத்துக்கொள்! இப்பொழுதே இயேசுவை நோக்கிப் பார்த்துப் பிழைத்துக்கொள். 64 பார்க்கிறீர்களா? அவரே நிஜம். அது நிழலாக (negative) இருந்த இடத்தில் அவரே நிஜமாக (Positive) இருக்கிறார். அது ஒரு நிழலாக இருந்தது; என் நிழலைப் போலவே, இது நானாக இருப்பேன், அங்கே என் நிழல் இருக்கிறது. அதை விட இது எவ்வளவு உண்மையானது. அப்படியானால், வியாதியினால் சபிக்கப் பட்ட பாவ உலகத்திற்காக கல்வாரியில் உயர்த்தப்பட்ட பின்பு, இன்றிரவு பரிசுத்த ஆவியானவரில், இயேசு எவ்வளவு உண்மையானவராக இருக்கிறார், இப்போது அவர் உயர்த்தப்பட்டதின் மூலமாக, “அவர் நம்முடைய மீறுதல்களினிமித்தம் காயப்பட்டு; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.” பின்னர் அதற்கும் மேலாக: அவர் சிலுவையிலிருந்து திரும்பினார், சிலுவை யிலிருந்து கல்லறைக்குச் சென்றார், மீண்டும் திரும்பினார்; சரீரம் பரலோகத்திற்கு, பிதாவாகிய தேவனிடம் சென்றது; ஆவியானவர் மீண்டும் பூமிக்குத் திரும்பி வந்து, ஜனங்களுக்குள்ளே வாழ்கிறார். பழைய ஏற்பாட்டில், ஒரு ஒப்பந்தத்திற்காக அடையாளங்கள் எப்படி வழங்கப்பட்டன என்பது எவருக்கும் தெரியும். பழைய ஏற்பாட்டில்… இந்த நாட்களில், நாம் ஒரு உடன்படிக்கை செய்யும்போது, “அதற்காகக் கைகுலுக்குவோம்” என்று சொல்கிறோம். நாம் ஒப்புக் கொள்கி றோம். சீனாவில், அவர்கள் ஒருவரிலொருவர் கொஞ்சம் உப்பைத் தூவுகிறார்கள். அது ஒரு ஒப்பந்தம். 65 ஆனால் பழைய ஏற்பாட்டில், அவர்கள் ஒரு ஒப்பந்தத்தைச் செய்த விதம், அவர்கள் ஒரு மிருகத்தை எடுத்து, அதைக் கொன்று பிளந்து, அந்த செத்த துண்டுகளுக்கிடையே நிற்பார்கள்; ஆபிரகாமையும் அவனுடைய சந்ததியையும் இரட்சிப்பார் என்று ஆபிரகாமுடன் செய்த உடன்படிக்கையை உறுதிப்படுத்தி, சிறிய வெள்ளை வெளிச்சத்துடன் தேவன் செய்தது போல. அவர் அங்கே நின்றார், அவர்கள் ஒரு ஒப்பந்தத்தை எழுதினார்கள், “ஜான் டோ (John Doe) ஆகிய நான், இன்ன இன்ன காரியத்தைச் செய்ய ஒப்புக்கொள்கிறேன்” என்று. பின்பு அந்த ஒப்பந்தம் இரண்டாகக் கிழிக்கப்படுகிறது; ஒரு நபர் ஒரு பகுதியையும், மற்றவர் இன்னொரு பகுதியையும் எடுத்துக்கொள்கிறார்கள். அவர்கள் ஒரு சத்தியம் செய்கிறார்கள்… 66 [ஒலி நாடாவில் காலியிடம்] “…உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்.” அவர் கிறிஸ்துவிலிருந்து ஜீவனைக் கிழித்து, சரீரத்தை எடுத்து தமது வலதுபாரிசத்தில் உட்காரவைத்து, பரிசுத்த ஆவியானவரை மீண்டும் சபைக்கு அனுப்பினார்; அதுவே இன்றிரவு மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட நிபந்தனையற்ற உடன்படிக் கையாகும். சகோதரனே, இயேசு கிறிஸ்துவின் ஜீவன் ஒவ்வொரு தனிநபருக்குள்ளும் இருக்க வேண்டும்; அதுவே தேவனுடைய உடன் படிக்கை. மேலும் நீங்கள் தேவனுடைய ஆவியினால் பிறந்தது எவ்வளவு நிச்சயமோ, பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குள் இருப்பது எவ்வளவு நிச்சயமோ, அவர் கடைசி நாட்களில் உங்களை எழுப்புவார், அவர் வியாதியைக் குணமாக் குவார் என்று தேவன் ஆணையிட்டுக் கூறியிருக்கிறார் (அல்லேலூயா!). இப்போது நான் மிகவும் ஆவிக்குரியவனாய் உணருகிறேன். நான் தொடங்க விரும்ப வில்லை…[ ஒலி நாடாவில் காலியிடம்] 67 பார்க்கிறீர்களா? நான் வியாதியுள்ளவர் களுக்காக ஜெபிக்கப் போகிறேன், ஆனால் நீங்கள் இங்கே இருக்கிறீர்கள். தேவன் செய்த உடன்படிக்கை, “மோசே வனாந்தரத்தில் சர்ப்பத்தை உயர்த்தினதுபோல, மனுஷ குமாரனும் உயர்த்தப்பட வேண்டும்” என்பதே. அதுவே உடன்படிக்கை: பார்த்துப் பிழையுங்கள். 68 இப்போது, பரிசுத்த ஆவியானவர் மீண்டும் கீழே இறங்கி வருவது, “இன்னுஞ் சற்று நேரத்திலே உலகம் என்னைக் காணாது.” உலகம் என்றால் என்ன? அங்கே காஸ்மோஸ் (kosmos) என்ற சொல்லில் உலகம் என்பது “உலக அமைப்பை” குறிக்கவில்லையா? அதாவது, நான் சொல்கிறேன், உலகம் அதன்… பூமியா? அது உலக அமைப்பை, ஜனங்களைக் குறிக்கிறது. “உலகம் என்னைக் காணாது; நீங்களோ என்னைக் காண்பீர்கள்.” நீங்கள் என்பது யார்? சபை. “நீங்களோ என்னைக் காண்பீர்கள்: ஏனெனில் நான்…” (ஒரு தனிப்பட்ட பிரதிபெயர்ச்சொல்) “உலகத்தின் முடிவு பரியந்தமும் உங்களுடனேகூட, உங்களுக் குள்ளும் இருப்பேன்.” உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து தமது வல்லமையோடும், அடையா ளங்களோடும், அற்புதங்களோடும் ஜனங்கள் மத்தியில் கிரியை செய்கிறார். 69 சகோதரனே, ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தல் வரை, தேவன் எப்போதும் தமது சபையை அடையாளங்களாலும் அற்புதங் களாலும் உறுதிப்படுத்தியிருக்கிறார். அவர்களின் உபதேசம் என்னவாக இருந்தாலும், தேவன் எப்பொழுதும் இஸ்ரவேலர்களின் மீது அந்த அக்கினி ஸ்தம்பத்தைத் தொங்கவிட்டிருக்கிறார். அவர் இயேசு கிறிஸ்துவுடன் இருந்தார்; அவர், இங்கே சபையுடன் இருக்கிறார்; அவர் சீஷர்களுடன் இருந்தார். 70 மேலும் அவர் கட்டளையிட்டார், “கடைசி நாட்களில் மனிதர்கள் துணிகரமுள் ளவர்களும், இறுமாப்புள்ளவர்களும், படித்த அறிஞர்களுமாக இருப்பார்கள்; தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பலனை மறுதலிப்பார்கள்.” இன்றைக்கு நம்மிடம், சடங்காச்சாரங்கள், சம்பிரதாயங்கள் மற்றும் இறையியலால் அமைக்கப்பட்ட ஒரு சபையைக் கொண்ட அநேக மக்கள் இருக்கிறார்கள். 71 ஆனால் சகோதரனே, தேவன் தாம் எங்கே இருக்கிறார் என்பதை உறுதிப் படுத்துகிறார்: அதே அடையாளங்களால்; அதே பரிசுத்த ஆவியானவரால்; அதே அக்கினி ஸ்தம்பத்தால்; அதே அற்புதங்களால்; அவர்களுக்குள் வாழும் அதே இயேசு, மக்களின் எண்ணங்களை, அவர்களின் இருதயங்களின் இரகசியங்களை வெளிப்படுத்துகிறார்; வியாதியுள்ளவர்களைக் குணமாக்குகிறார்; குருடர்களைப் பார்க்கச் செய்கிறார்; அவர்களைப் பரிசுத்த ஆவியானவரால் நிரப்புகிறார்; சந்தோ ஷத்தையும் சமாதானத்தையும் தருகிறார். அப்படி யானால், எப்படி—அப்படியானால் இவ்வளவு அன்பான ஒருவரை நாம் எப்படி மறுதலிக்க முடியும்? ஆமென். நான் அவரை நேசிக்கிறேன், நீங்கள் நேசிக்கவில்லையா? நம் தலைகளைத் தாழ்த்து வோம். 72 எங்கள் பரம பிதாவே, இங்கே எனக்கு முன்பாக பல கைக்குட்டைகள் வைக்கப் பட்டிருக்கின்றன. அவை ஏழை, வியாதியுள்ள, துன்பப்படும் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றன. இந்த மகிமையான நாட்களில் ஒன்றில், இவையெல்லாம் முடிவுக்கு வரப் போகிறது, நாங்கள் உம்முடைய வீட்டிற்கு வரப்போகிறோம். தேவனே, இப்போது நாங்கள் மிகவும் உண்மையுள்ளவர்களாக இருக்க எங்களுக்கு உதவி செய்யும். இப்போது எங்களை ஆசீர்வதியும். நான் இந்தக் கைக் குட்டைகளின்மேல் கைகளை வைக்கிறேன். எந்த மனிதனிடத்திலும் எந்த வல்லமையும் இல்லை என்பது உமக்குத் தெரியும், ஆனால் வல்லமை என்பது (சர்ப்பத்திலோ, அல்லது அது செய்யப்பட்ட வெண்கலத்திலோ, அல்லது அது தொங்கவிடப்பட்ட கம்பத்திலோ எந்த வல்லமையும் இல்லை.), ஆனால் தேவன் சொன்னதைச் செய்வதில்தான் வல்லமை இருந்தது. இதுவே கட்டளையாக இருக்கிறது. உம்முடைய ஊழியக்காரனுடைய சரீரத்திலிருந்து கொண்டுவரப்பட்ட கைக்குட்டைகளையும் கச் சைகளையும் அவர்கள் எடுத்துச் சென்றபோது, அசுத்த ஆவிகள் அவர்களை விட்டுப் போயின என்று, நீர் மக்களின் விசுவாசத்தைக் கனப்படுத்தினீர் என்பதை பைபிளில் நாங்கள் வாசிக்கிறோம். இன்றிரவும் நீர் தேவனாகவே இருக்கிறீர், நாங்கள் உம்மை நம்புகிறோம். இந்த மக்கள் ஒவ்வொருவரையும் நீர் குணமாக்கி, உமது குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் அவர்களை முழுமையாகச் சுகமாக்கும்படி நான் ஜெபிக்கிறேன். 73 மேலும் இப்போது, ஆண்டவரே, இன்றிரவு மிகவும் சந்தோஷமாக உணருகிறேன். ஓ தேவனே, நான் அந்தப் பாதையில், அங்கே கீழே, சிறிது தூரம் பார்க்கிறேன்; என்னால், நான் பெரிய காரியங்களைக் காண்பது போலத் தெரிகிறது. நான் மிகவும் சந்தோஷமாக இருக்கி றேன், உமக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். உலகம் இதுவரை பெற்றிராத மிகப்பெரிய அசைவாடுதல்களில் ஒன்றின் விளிம்பில் நாங்கள் இருக்கிறோம் என்று நான் நம்புகிறேன், ஆண்டவரே. அதைப் பார்க்க என்னை இருக்கப்பண்ணும், பிதாவே. நீர் அதைச் செய்வீர் என்று ஜெபிக்கிறேன். 74 இப்போது நாங்கள் இங்கே மெதுவாக நகர்ந்துகொண்டிருக்கும்போது, உம்முடைய ஆவியானவர் இன்றிரவு மகா வல்லமையோடு வருவாராக. வித்தியாசமான சபைகளிலிருந்தும், வித்தியாசமான உபதேசங்களிலிருந்தும் இங்கே கூடியிருக்கும் இந்த மக்கள், மற்றும் அவர்களில் சிலர் வித்தியாசமான எண்ணங்கள், மற்றும் மூடநம்பிக்கைகள், மற்றும் எல்லாவற்றுடனும் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாவற்றையும் ஒரு புறம் ஒதுக்கிவிட்டு, “இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து, அதே காரியங்களைச் செய்வதாக வாக்களித்திருந்தால், அதைச் செய்வதற்காக அவர் இன்றிரவு இங்கே இருக்கிறார் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று சொல்வார்களாக. அதை அருளுங்கள், ஆண்டவரே. 75 மேலும் நான் உம்முடைய மக்களுக்கு ஊழியம் செய்யும்போது, இப்போது எனக்கு உதவி செய்து, என்னை ஆசீர்வதியும். நான் அவர்களுக்கு ஊழியம் செய்யும்போது, நான் உமக்கே ஊழியம் செய்கிறேன் என்பதை நான் அறிவேன்; ஏனென்றால், “இந்த என் சிறிய வர்களில் ஒருவனுக்கு எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்” என்று நீர் சொல்லியிருக்கிறீர். பெரிய ஆசீர்வாதங்களை அருளும், மற்றும் வியாதியுள்ள அனைவரையும் குணமாக்கும், ஒவ்வொரு ஆத்துமாவையும் இரட்சியும், இயேசுவின் நாமத்தில் இதைக் கேட்கிறோம். ஆமென். [ஒலி நாடாவில் காலியிடம்]…?… 76 எபிரெயர் 13:8-ல், “இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றென்றைக்கும் மாறாத வராயிருக்கிறார்” என்று வேதம் போதிக்கிறதா? அப்படியானால், இயேசு கிறிஸ்து, “நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக் கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக் கொள் வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும்” என்று சொன்னாரா? தேவன் அதைச் சொல்கிறார் என்பதை நாம் அறிவோம். இயேசு, “இன்னுஞ்சற்று நேரத்திலே உலகம் என்னைக் காணாது; நீங்களோ என்னைக் காண்பீர்கள்: நான் உலகத்தின் முடிவு பரியந்தமும் உங்களுடனேகூட, உங்களுக் குள்ளும் இருப்பேன்” என்று சொன்னாரா? இயேசு, “நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்” என்று சொன்னாரா? அவர் அப்படிச் சொன்னாரா? “அவைகளைவிடப் பெரியவைகளையும் செய் வீர்கள்; ஏனெனில் நான் என் பிதாவினி டத்திற்குப் போகிறேன்” என்றாரா? சரி, அவர் எப்படிப்பட்ட குணமுடையவராக இருந்தார், எப்படிப்பட்ட நபராக இருந்தார் என்பதைக் கண்டுபிடிப்போம். 77 இன்றிரவு நீங்கள் எவன்ஸ்வில் (Evansville) வழியாகச் சென்று, இயேசு கிறிஸ்து வைக் கண்டுபிடிக்கப் போகிறீர்கள் என்றால், அவர் இங்கே பூமியில் இருந்திருந்தால், அவர் எப்படிப்பட்ட நபராகக் காணப்படுவார் என்று நான் பார்க்கிறேன். இப்போது, நம்முடைய இறையியலின் திரைகளை நாம் மூடி வைப்போம். அவர் மற்ற எந்த மனிதனைப் காட்டிலும் வித்தியாசமாக ஆடை அணிந்திருக்க மாட்டார். அவர் அவர்கள் எல்லாரையும் போலவே காணப்பட்டார்; அவர் அவர்களுக்கு நடுவே செல்வார், அவர் யார் என்று அவர்களுக்குத் தெரியாது. அவர் உயிர்த்தெழுந்த பிறகுகூட, ஒரு நாள் முழுவதும் சிலரிடம் பேசிக்கொண்டிருந்தார், ஒரு நாள், அவர்களில் இருவருடன் அந்தப் பாதையில் நடந்து சென்றார்… நான் நம்புகிறேன், ஓ, அதெல்லாம் ஒரு ஓய்வுநாள்பிரயாண தூரமாக இருந்தது; எம்மாவு வரை அது எவ்வளவு தூரம் என்று எனக்குத் தெரியாது, ஆனால் அது கணிசமான தூரமாகவே இருந்தது. அவர் அவர்களுடன் நடந்து சென்றார் ஆனால் அவர்கள் அதை அறியவில்லை. மற்ற எந்த மனிதனைப் போலவும் அவர் ஆடை அணிந்திருந்தார். அது சரிதானே? அவர் அன்பு நிறைந்த, மனதுருக்கம் நிறைந்த ஒரு மனிதராக இருந்தார்; இருந்த போதிலும், அவரால் பேச முடிந்தது. 78 எப்படிப்பட்ட மக்கள் அவரைப் பின்பற்றினார்கள்? எப்படிப்பட்ட கூட்டம் அவருக்கு கிடைத்தது? அவர் உயர்ந்த அதிகார வர்க்கங்களில் இருந்தாரா? அவர்கள் அவரைக் குற்றப்படுத்தி, அவரை “ஒரு பிசாசு” என்று சொன்னார்கள். அவர் சும்மா…அவரால் முடியும் என்பதை அவர்கள் கண்டார்கள்… மக்களின் எண்ணங்களை அவர் அறிந்திருந்தார். “அவர் மனதை வாசிக்கிறவர்.” அது சரிதான்: அவர் அவர்கள் நினைவுகளை அறிந்துகொண்டார். அதற்கு அவர்கள், “அவர்…ஏன், அவர் வெறும்…அவர் ஒரு…அவர் ஒரு பிசாசு; அவர் பெயெல்செபூல்” என்றார்கள். அது சரிதானே? 79 அப்படியானால், யார் அவரைப் பின்பற்றினார்கள்? லூக்கா நமக்குச் சொல்கிறார், “சாதாரண ஜனங்கள் அவர் சொல்வதை விருப்பத்தோடே கேட்டார்கள்,” வெறும் சாதாரண, அன்றாட மக்கள். மீனவர்கள் மற்றும் பல, நதிக்கரையோரத்திலிருப்பவர்கள்: அவர் கள்—அவர்கள்தான் அவர் சொல்வதைக் கேட்டார்கள். 80 அவர், “துக்கமடைந்தவரும், பாடு அனுபவித்தவருமான ஒரு மனிதராக” சுற்றித் திரிந்தார். அவர் ஒரு பெரிய, வலுவான தோற்றமுள்ள மனிதன் அல்ல, ஒருவேளை, இருநூறு பவுண்டுகள் எடையுள்ளவராகவும் இல்லை. ஏனென்றால், அவர் ஒருவேளை சிறிய, மெலிந்த நபராக இருந்திருக்கலாம். "81 ஆனால் இப்போது, அவர் எத்தகைய ஊழியத்தைக் கொண்டிருந்தார் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்பு கிறேன். அவர் தன்னை ஒரு குணமாக்குபவர் என்று உரிமை கொண்டாடினாரா? இல்லை, அவர் தன்னை ஒரு குணமாக்குபவர் என்று உரிமை கொண்டாடவில்லை. அவர் சொன்னார், ""என்னாலே ஒன்றும் செய்யக்கூடாது; என் பிதா எனக்குக் காண்பிக்கிறவைகளையே நான் செய்கிறேன்,"" என்று அவர் சொன்னார். அது சரியா? அவர், ""மெய்யாகவே மெய்யாகவே"" (யோவான் 5:19, அவர் அந்த முடவர்கள் அனைவரையும் கடந்து சென்றபோது), அவர் சொன்னார்... அவர்களில் ஒருவரையும் அவர் குணமாக்கவில்லை, முப்பத்தெட்டு வருஷமாக ஏதோ ஒரு வியாதியைக் கொண்டிருந்த ஒரு மனுஷனிடம் சென்றார், அவனால் நடக்கவோ அல்லது குளத்தில் இறங்கவோ கூட முடிந்தது, ஆனால் அவன் சொன்னான், ""நான் வருவதற் குள்ளே, என்னை விட நல்ல நிலையில் உள்ள வேறொருவன் எனக்கு முன்னே இறங்கி விடுகிறான்."" அவன் ஒரு படுக்கையின் மேல், ஒருவேளை ஒரு சிறிய பழைய போர்வையும் தலையணையும் கொண்டு, அங்குமிங்கும் படுத்துக்கொண்டு, குளத்தில் இறங்க முயற்சித்துக்கொண்டிருந்தான். அவன் அங்கே இருந்ததை இயேசு அறிந்திருந்தார், மேலும் அவன் எவ்வளவு காலமாக அங்கே இருந்தான் என்பதையும் அவர் அறிந்திருந்தார்; அவன் எப்படி-எப்படி அங்கே இருந்தான் என்பதை அவர் அறிந்திருந்தார், அவனுக்கு என்ன வியாதி என்பதையும் அவர் அறிந்திருந்தார். இல்லையா? முப்பத்தெட்டு வருஷங்களாக அவன் இந்த நிலைமையில் இருந்தான் என்பதை அவர் அறிந்திருந்தார்." 82 சரி, பிறகு அவர் அந்த மனுஷனை மட்டும் குணமாக்கினார், ஏன்? அவனுடைய நிலைமையை அவர் அறிந்திருந்தார்; மற்றவர் களை அங்கேயே விட்டுவிட்டு அவர் நடந்து சென்றார். ஏன் அவர் மற்றவர்களை விட்டுவிட்டார்? அவர் அவர்கள் எல்லாரையும் குணமாக்கியிருக்கலாம் என்று தோன்றுகிற தல்லவா? ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. "83 யூதர்கள், அவரை விசாரித்தார்கள். அவர் சொன்னார், ""மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; பிதாவானவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அப்படியே செய்கிறார்."" அது சரியா? ""நான் ஒரு தரிசனத்தை மட்டுமே பார்க்கிறேன், மேலும் பிதா எனக்கு என்ன காண்பிக்கிறாரோ, அதை நான் போய் செய்கிறேன்."" ""ஓ,"" நீங்கள் சொல்லலாம், ""சகோதரர் பிரான்ஹாம், எனக்கு நிறைய பேரைத் தெரியும்...""" "84 ஆம், அந்த ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்; அவளைப் பற்றி அவர் எந்தத் தரிசனத்தையும் காண வில்லை. பாருங்கள், அவர் அவளைக் குணமாக்கியதாக ஒருபோதும் சொல்லவில்லை, ""உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது"" என்று அவர் சொன்னார். அது சரியா?" "85 குருடர்கள் அவருக்குப் பின்னால் வந்து, ""இரக்கமாயிரும், இரக்கமாயிரும்"" என்று சொன்னதைப் பாருங்கள். அவர் அவர்களைப் பற்றி எந்தத் தரிசனத்தையும் காணவில்லை, அவர் அப்படியே வீட்டிற்குள் சென்றுவிட்டார். அவர்கள் அந்தக் குருடர்களை அவரிடம் கொண்டு வந்தபோது, ""அவர்களுடைய கண் களை அவர் தொட்டு, 'தக்கதாக'"" (எதன்படி?) ""'உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது' என்று சொன்னார்."" அது சரியா? அவர்களுடைய விசுவாசம் சரியாக இருந்தது, ""அவர்கள் கண்கள் திறக்கப்பட்டன."" இதுதான் வேதம்." "86 இயேசு உண்மையைத்தான் சொன்னார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? சரி, யோவான் 5:19-ல், பிதா தமக்குக் காண்பிக்கும் வரை தாம் ஒன்றும் செய்வதில்லை என்று இயேசு சொன்னார்: ""நான்... பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதை யேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்ய மாட்டார். என் பிதா இதுவரைக்கும் கிரியை செய்துவருகிறார், நானும் கிரியை செய்து வருகிறேன்."" வேறு வார்த்தைகளில் சொல்வ தானால், பிதா தமக்குச் சொன்னதை அவர் அப்படியே செய்து காட்டினார்." "87 ஆனால் அவர் அவர்களுடைய சிந்தனைகளை அறிந்திருந்தார். அவர் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அவர் அவர் களுடைய சிந்தனைகளை அறிந்து, (அங்கிருந்த ஒருவரிடம்) ""ஏன் நீங்கள் தர்க்கிக்கிறீர்கள்? உங்கள் இருதயங்களில் நீங்கள் ஏன் சிந்திக்கிறீர்கள்?"" என்றும், (அவர்களுக்குள்ளே) ""ஏன் நீங்கள் இதைச் செய்கிறீர்கள்? ஏன் அதைச் செய்கிறீர்கள்?"" என்றும் கேட்டார்." 88 இப்போது, அவர் மரித்தோரிலிருந்து எழுந்திருந்தும், உலகம் அவரைக் காணவோ, அடையாளம் கண்டுகொள்ளவோ முடியவில்லை என்றாலும், சபை அவரை அடையாளம் கண்டுகொள்ளுமானால், மேலும் அன்று அவர் செய்த அதே காரியங்களை இன்றும் அவர் செய்து கொண்டிருப்பார் என்றால்; அவர் அதே காரியங்களை இன்று இரவும் தமது சபையில் வெளிப்படுத்த முடியும். அது சரியா? 89 அவர் அதைச் செய்வார் என்றால், அவர் அதைச் செய்வார் என்றால், நீங்கள் ஒரு பாவியாக இருந்தால் அவரை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்வீர்களா? நீங்கள் ஒரு பின்மாற்றக்காரராக இருந்தால், நாளைக்கு நீங்கள் சபைக்குத் திரும்பிச் செல்வீர்களா (அல்லது, இன்றிரவே உங்களை ஒப்புக் கொடுத்து, இன்றிரவே கிறிஸ்துவிடம் திரும்பி), நாளைக்கு உங்கள் சபைக்குத் திரும்பிச் சென்று, தேவனைத் துதிப்பீர்களா? "90 மேலும் இன்றிரவு நீங்கள் வியாதியாய் இருந்து, அவர் அதைச் செய்தால், ""அது—அது தேவன் எனக்குப் பிரசங்கிக்கும் ஒரு செய்தி; நான் என் சுகத்தை ஏற்றுக்கொள்ளப் போகிறேன், இன்றிரவு இங்கிருந்து வெளியே சென்று, சுகமாயிருப்பேன்"" என்று சொல் வீர்களா? நீங்கள் அப்படிச் செய்வீர்களா? கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக." சரி. அந்தக் கார்டுகள் எங்கிருந்து வந்தன? X-ஆ? சரி, அவர்கள் நூறு X ஜெபக் கார்டுகளைக் கொடுத்திருக்கிறார்கள். நம்மால் அதிக பேரை அழைக்க முடியாது... 91 [ஒலி நாடாவில் காலியிடம்] ...?... அவர்களால் முடிந்தால், அவர்கள் ஒருவரி லிருந்து மற்றொருவருக்குச் செல்கிறார்கள். அது பைபிளின் வசனம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? நிச்சயமாக அது வேதத்திலுள்ளது. அவர்கள் ஒருவரிலிருந்து மற்றொருவருக்குச் செல்வார்கள், எனவே பயபக்தியாக இருங்கள். "92 பாருங்கள், பல நேரங்களில் அது நகர்வதையும், ஒரு இடத்தில் நிற்பதையும் நான் பார்க்கிறேன், என் உள்ளத்தில் என் ஆத்துமா கூட நடுங்குகிறது. ""ஓ தேவனே, இந்த உலகம் எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாக, அந்த நிழல் அங்கே கீழே இருக்கிறது; அது அங்கேதான் இருக்கப்போகிறது, மீண்டும் அங்கேயேதான்"" என்று நான் நினைக்கிறேன். புரிகிறதா? நீங்கள் அதை இங்கிருந்து ஒருவரிடம் இழுத்தால், அது நேராக அங்கிருக்கும் மற்றொருவருக்குச் செல்கிறது, அல்லது அங்கே உள்ள வேறொருவருக்குச் செல்கிறது, அல்லது அதுபோல ஏதோ நடக்கிறது. அது அப்படிச் செய்கிறது. இப்போது, நண்பர்களே, நற்செய்தியின் ஊழியக்காரனாக, இது சத்தியம் என்பதை நிரூபிக்க தேவனின் வார்த்தை எனக்கு முன்பாக இருக்கிறது, மேலும் இது சத்தியம் என்பதை அறிந்த நூற்றுக்கணக்கான சம்பவங்களும், ஒரு வரலாறும் இதற்குப் பின்னால் இருக்கிறது." "93 சில காலத்திற்கு முன்பு, அரிசோனா மாகாணத்தின் ஃபீனிக்ஸ் நகரில், அங்கே உட்கார்ந்திருந்த ஒரு மனுஷன், ""இது உலகில் வேறொன்றுமில்லை, வெறும் உளவியல்தான்,"" என்றும், ""அவ்வளவுதான், இந்த மனுஷன் அவர்களுடைய மனதை வாசிக்கிறார்,"" என்றும் சொன்னான்." "94 அப்போது நான், ""எல்லாரும் தங்கள் தலைகளை வணங்குவீர்களா?"" என்று கேட் டேன். அவன் தன் தலையை நிமிர்த்தியபடியே அங்கே உட்கார்ந்திருந்தான், அவன் தன் தலையை வணங்கவில்லை. அது எங்கோ இருக்கிறது என்று என்னால் சொல்ல முடிந்தது, நான் சுற்றிலும் பார்த்தேன், அந்த மனுஷனைக் கண்டுபிடித்தேன். மேடையில் இருந்த வரவேற்பாளர்களில் ஒருவரிடம் அவனிடம் போய் சொல்லும்படி நான் கிசுகிசுத்தேன்." "அவன், ""நான் அப்படிச் செய்யத் தேவையில்லை. இது ஒரு பொது இடம், நான் அதைச் செய்ய வேண்டியதில்லை"" என்று சொன்னான். அந்த வரவேற்பாளர் திரும்பி வந்து என்னிடம் சொன்னார்." "95 நான், ""சரி"" என்று சொன்னேன். அது என்னவென்றால், ஒரு குழந்தைக்கு வந்த வலிப்பு நோய், ஒரு துணியால் சுற்றப்பட்ட ஒரு துணி துவைக்கும் கிளிப்பை அதன் வாயில் வைத்திருந்தார்கள், மேடையிலேயே அதற்கு வலிப்பு வந்துகொண்டிருந்தது." "96 அது... அதை என்னால் வெளியேறச் செய்ய முடியவில்லை; அந்த மனுஷன் கீழ்ப்படியாதவனாயிருந்தான். தூதன் சொன்னார், ""மக்கள் உன்னை விசுவாசிக்கும்படி நீ செய்தால்."" நீங்கள் அவர்களிடம் சொல்வதை அவர்கள் செய்யாவிட்டால், அவர்கள் உங்களை விசுவாசிக்கவில்லை என்பதை அவர்கள் காட்டு கிறார்கள். புரிகிறதா? நீங்கள் அவர்களை ஏதோ வொன்றைச் செய்யச் சொல்லும்போது, அவர்கள் அப்படியே நின்றால், சரி, பிறகு அங்கே-அங்கே நான் செய்யக்கூடியது ஒன்றுமில்லை, அல்லது தேவன் செய்யக்கூடியதும் ஒன்றுமில்லை, வேறு எவரும் செய்யமுடியாது. புரிகிறதா?" எனவே அந்த மனுஷன் அப்படியே உட்கார்ந்திருந்தான். "97 நான் சொன்னேன், ""சரி. உன்னுடைய கீழ்ப்படியாமையினாலே இந்தப் பிஞ்சுக் குழந்தை கஷ்டப்பட தேவன்... அனுமதிக்கா திருப்பாராக. ஞாபகம் வைத்துக்கொள், உனக்குச் சொல்லப்பட்டுவிட்டது."" நான் பரம பிதாவிடம் அவர் உதவி செய்வாரா என்றும், அந்த மனுஷனின் பாவத்திற்காக இந்தக் குழந்தை கஷ்டப்பட அனுமதிக்கக் கூடாது என்றும் கேட்டேன்; அந்த வலிப்பு இந்தக் குழந்தையை விட்டு நீங்கியது." 98 அந்த ஆள் அங்கே கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தான், பிறகு நேராக எழுந்து வெளியே சென்றுவிட்டான்; இரண்டு நாட்களுக்குப் பிறகு, தெருவில் கடுமையான வலிப்பில் அவதிப்பட்டுக்கொண்டிருந்த அவனை அவர்கள் தூக்கிக்கொண்டு வந்தார்கள். அவன் அந்த நகரத்தில் ஏதோ ஒரு வகையிலான ஒரு காவலராகவோ அல்லது அதிகாரியாகவோ அல்லது வேறு ஏதோவாகவோ இருந்தான். 99 சுமார் ஆறு வாரங்களுக்குப் பிறகு, நான் கலிபோர்னியாவின் சாண்டா ரோசாவில் இருந்தேன். அவனை அங்கே ஒரு இடத்தில் உட்கார வைத்திருந்தார்கள், அவனுடைய கண்கள் இப்படி வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன, அவன் தொடர்ந்து அந்த வலிப்பிலிருந்து வெளியே வரவேயில்லை, அவன் எல்லா நேரத்திலும் அதிலேயே இருந்தான், அவன் முகம் முழுவதும் தாடி வளர்ந்திருந்தது. "100 அவர்கள் என்னை வெளியே அழைத்துச் செல்லத் தொடங்கியபோது, அவனுடைய பரிதாபமான மனைவி அங்கே சேற்றில் படுத்துக்கொண்டு, என் கால்சட்டையைப் பிடித்து இழுத்துக்கொண்டிருந்தாள், அது என்ன வென்று எனக்குத் தெரியவில்லை, அவள் இழுத்துக்கொண்டிருந்தாள். எனவே அது சகோதரர் பிரவுன் என்று நான் நினைத்தேன், கூட்டத்திலிருந்து வெளியே வரும்போது நான் ஒருவித பாதி மயக்க நிலையில் இருந்தேன். அவள் சொன்னாள், ""போதகர் பிரான்ஹாம், நீங்கள் இதை அப்படியே கடந்து செல்ல முடியாது, அவ்வளவுதான்,"" அவள் சொன்னாள், ""உங்களால் முடியாது."" அவள் சொன்னாள், ""இரக்கம், ஓ, கூப்பிடுங்கள், நான் சொன்னேன்-நான் சொன்னேன், அவரை அப்படியே விட்டுவிடாதீர்கள், அப்படிச் செய்யாதீர்கள்.""" "நான் கேட்டேன், ""என்ன விஷயம்?""" "அப்போது சகோதரர் பிரவுன், ""அம்மா, நீங்கள் சற்று..."" என்று சொல்லி அவளுடைய கைகளை இழுத்தார்." """சரி,"" நான் கேட்டேன், ""என்ன அது சகோதரர் பிரவுன்? என்னவென்று பாருங்கள், சகோதரர் மூர் என்னைக் கூட்டிக்கொண்டு நடக்கட்டும்.""" 101 நாங்கள் சென்றோம், கொஞ்ச நேரம் நடந்துவிட்டு, திரும்பி வந்தோம். அந்த மனுஷன் இருந்த அறைக்கு அவர்கள் என்னை அழைத்துச் சென்றார்கள், அங்கே அவன் இருந்தான், ஆறு அல்லது எட்டு வாரங்களாக அங்கே உட்கார்ந்திருந்தான், அவனுடைய கண்கள் வெறித்துப் பார்த்தபடியே, தொடர்ந்து அப்படியே வெறித்துக்கொண்டிருந்தது. துரோகி களுடைய வழியோ கடினமானது, உங்களுக்குத் தெரியும். 102 வாஷிங்டனிலுள்ள டகோமா கூட்டத்தில் கலந்துகொண்ட யாராவது இங்கே இருக்கிறீர்களா? எந்தக் கைகளையும் நான் பார்க்கவில்லை, ஆனால்... என்ன? ஆம், அங்கே கதவுக்கு அருகில். கதவுக்கு அருகில் இருக்கும் சகோதரனே, நீங்கள் வாஷிங்டன் டகோமாவில், வாஷிங்டன் டகோமா கூட்டத்தில் இருந்தீர்களா? அது-அது... ஆம். "103 இந்த வழியில் உட்கார்ந்திருந்த ஒரு ஆள், ஒரு மனநோயாளிக்காகத் தன் தலையை வணங்க மறுத்துவிட்டான், அந்த ஆவி அங்கிருந்து விலகியது. அந்த ஆள் அவ்வளவு, முட்டாள்தனமாக இருந்தான், அவன் கேட்கவே இல்லை. ""முட்டாள்தனம்!"" என்று அவன் சொன்னான். அவன் அப்படிச் சொன்னான், அதை அவன் மீண்டும் மீண்டும் சொன்னான். அந்த வலிப்பு அந்த மனுஷனை விட்டு விலகி, இவனைப் பிடித்துக்கொண்டது, ஒரு கோழி குதிப்பது போல, அவன் அங்கே அந்த இடம் முழுவதிலும் குதித்துக்கொண்டிருந்தான். அந்தப் பெரிய பனி அரங்கில் ஆயிரக்கணக்கானோர் இருந்தனர்; வெளியே உள்ள புத்தகத்தில் அதனுடைய படத்தையே நீங்கள் பார்க்கலாம். அங்கே அவன் அந்த இடம் முழுவதிலும் அப்படிச் செய்துகொண்டிருந்தான்." "104 அவர்கள், அவனுடைய ஆட்கள் அவனை இழுக்க முயன்றார்கள்... நான் சொன்னேன், ""இப்போது அது அவனுக்கும் தேவனுக்கும் இடையிலானது. புரிகிறதா? அதற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இல்லை, ஐயா. ஆம்."" இப்போது, அந்த நபர் பயபக்தியோடு இருந்திருந்து, அதுபோல ஏதாவது நடந்திருந்தால், அது வேறு விஷயம். ஆனால் கீழ்ப்படியாமல் இருந்தால், பிறகு அது-அது உங்களைப் பொறுத்தது. புரிகிறதா? நீங்கள்..." 105 எது சத்தியமோ அதை மட்டுமே என்னால் பேசமுடியும். நான் சத்தியத்தைப் பேசினால், தேவன் சத்தியத்தைக் குறித்துச் சாட்சி கொடுப்பார். அது சரியா? சரி. "106 இப்போது, உங்களால் முடிந்தவரை நீங்கள் பயபக்தியுடன் இருப்பீர்கள் என்றால். இப்போது, நான்-நான் ஒரு சிறிய இடைவேளை தருகிறேன், ஊழியக்காரர்களாகிய உங்களில் சிலர் கவனித்துக்கொள்ளுங்கள், விடாதீர்கள், ஒவ்வொரு பதினைந்து நிமிடங்களுக்கும் ஒருமுறை, நான் அதை கவனிக்காவிட்டால், என் கவனத்திற்குக் கொண்டு வாருங்கள், மக்கள் அங்குமிங்கும் நகர வேண்டியிருந்தால், அல்லது ஏதேனும் இருந்தால், நீங்கள் போகலாம். நான் செய்வேன், ஐயா, நீங்கள், இன்றிரவு நீங்கள் தானே ஆர்கன் வாசிப்பவர்? நீங்கள் ஆர்கனில் இருக்கிறீர்களா? உங்களால் முடிந்தால், கொஞ்ச நேரம் மிகவும் மெதுவாக, "" என்னோடு தங்கும் "" என்ற பாடலை வாசியுங்கள்." "107 இப்போது, இயேசு மரித்தோரிலிருந்து எழுந்திருக்கிறார் என்பதை நாம் அனைவரும் நினைவில் கொள்வோம். தங்குவது என்றால் ""உடன் இருப்பது"" என்று அர்த்தம், அவர் இப்போது இங்கே இருக்கிறார் என்பதை நாம் சிந்தித்துப் பார்ப்போம். அவர் இப்போது இந்த இடத்திற்கு நடந்து வந்தால் என்ன நடக்கும்? கற்பனை செய்து பார்ப்போம். நான் அவரைப் பார்க்கிறேன், அவர் அந்தச் சுவரின் வழியாக உள்ளே வந்து, கீழே நடந்து வந்து, இங்குள்ள மேடைக்கு வந்து, இந்த மைக்ரோபோனுக்கு முன்பாக நிற்கிறார்." "108 இப்போது, அவர் அந்தப் பெண்ணிடம் என்ன சொல்வார்? அவளைக் குணமாக்குவதைப் பொறுத்தவரை, ""நான் அங்கே கல்வாரியில் மரித்தபோதே, உன்னைக் குணமாக்கிவிட்டேன்"" என்று அவர் சொல்வார். அதுதான் வேதம், அதை மீற முடியாது. ""அவர் நம்முடைய மீறுதல்களினிமித்தம் காயப்பட்டு... அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்."" அது சரியா? கிணற்றருகே இருந்த பெண்ணிடம் அவர் பேசினது போல, அந்தப் பெண்ணிடம் பேசினால் அவளுக்கு என்ன பிரச்சனை என்பதை அவர் அவளிடம் சொல்வார்." 109 இப்போது இந்த அம்மா, எனக்குத் தெரிந்தவரை, நான் இவரைப் பார்த்ததே இல்லை. அப்படித்தானே? நாம் அறிமுகமில்லா தவர்கள், அப்படித்தானே அம்மா? எனக்குத் தெரிந்த ஒரே காரியம், நீங்கள் இங்கே மேடையில் இருக்கிறீர்கள் என்பது மட்டும்தான்; என் வாழ்க்கையில் உங்களை நான் பார்த்ததே இல்லை. 110 அங்கே வெளியே இருக்கிற நீங்கள் அனைவரும், ஜெபக் கார்டுகள் இல்லாத நீங்கள், ஜெபக் கார்டுகள் இல்லாத நீங்கள், ஜெபத்தில் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், தேவன்-தேவன் உங்களைக் குணமாக்குவார் என்று விசுவாசியுங்கள், பாருங்கள், நீங்கள்... தேவன் உங்களைக் குணமாக்குவார். "111 நீங்கள் அவரிடம் கேளுங்கள், ""தேவனே, எனக்காக இதை நீர் செய்யவேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் உம்மைச் சந்தேகிக்கவில்லை, முழு இருதயத்தோடு நான் அதை ஏற்றுக்கொள்கிறேன், நான் அதை விசுவாசிக்கிறேன், ஆனால் இங்கே கூட்டத்தில் இருக்கிற என்னிடம் நீர் பேசினால், நான் இப்போது ஜெபித்துக்கொண்டிருக்கிறேன். மேடைக்கு வர வழியில்லாமல், எந்த ஜெபக் கார்டோ, அல்லது வேறு ஏதுவுமில்லாமல், இங்கு உட்கார்ந்திருக்கிற என்னிடம் பேசுவதற்கு அந்தச் சகோதரரை நீர் பயன்படுத்தினால், சபைக்குள் வர எனக்கு எந்த வழியுமில்லை; ஆனால் எனக்குத் தெரிய வேண்டும் ஆண்டவரே, நீர் அந்தச் சகோதரரிடம் பேசி, அவரை என் பக்கம் திருப்பி, என் வாழ்க்கையைக் குறித்து ஏதாவது சொன்னால்: அது ஒரு-ஒரு உறுதிப்படுத்தலாக இருக்கும், அதன்பிறகு நான் முழு இருதயத்தோடு உம்மை விசுவாசிப்பேன்; ரொம்ப காலத்திற்கு முன் பாகவே அங்கே நீர் என்னைக் குணமாக்கி விட்டீர் என்பதை விசுவாசித்து, என் சுகத்தை விசுவாசித்து நான்-நான்-நான் இங்கிருந்து மகிழ்ச்சியாகச் செல்வேன்"" என்று சொல்லுங்கள்." நான் அந்த அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, நீங்கள் அப்படி ஜெபித்து உங்களுக்கு உதவி செய்யும்படி தேவனிடம் கேளுங்கள். "இப்போது, நிச்சயமாக, சில இடங்களில் அது உருவாவதை உங்களால் உணர முடியும்: ""இவர் அவளுடைய மனதை வாசிக்கப் போகிறார்"" என்று." 112 இல்லை, நான் அப்படிச் செய்யப் போவதில்லை, நான் செய்யமாட்டேன், அதுமட்டுமல்ல... பரலோகத்திலிருக்கிற தேவன் அதை அறிவார், என் இருதயத்தின் மேல் என் பைபிளை வைத்து, நான் எவருக்கு முன்பாக நிற்கிறேனோ அந்தச் சர்வவல்லமையுள்ள தேவனுக்கு முன்பாகச் சொல்கிறேன்: நான் மனதை வாசிப்பவன் அல்ல. ஆமாம், ஆமாம். ஒருநாள் நான் நியாயத்தீர்ப்பைச் சந்திக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியும். இல்லை, ஐயா. 113 ஆனால் நான் எவருக்கு முன்பாக நிற்கிறேனோ அந்தத் தேவனுக்கு முன்பாகவும், இங்கே வைக்கப்பட்டிருக்கிற என் பைபிளுக்கு முன்பாகவும் சொல்கிறேன்: அந்தப் படத்தில் நீங்கள் பார்த்த அந்தத் தேவதூதன், அந்த வெளிச்சம், அது உண்மை என்று எனக்குத் தெரியும். பட்டப்பகலிலேயே, நான் இருந்த இடத்திலேயே, அது அங்கே நின்றதை நான் பார்த்திருக்கிறேன்: தரிசனங்கள். அது உண்மை என்று தேவனுக்குத் தெரியும். 114 காரியங்கள் நடப்பதற்கு வாரங்கள், மற்றும் மாதங்கள், மற்றும் வருடங்களுக்கு முன்பாகவே அது சொல்லும், உங்களுக்குத் தெரியும் அது உண்மை என்று; ஆனால் ஒருமுறை கூட, அது எதையும் தவறாகச் சொன்னதில்லை, ஆனால் எதுவோ அது முற்றிலும் உண்மையாகவே இருக்கும். 115 இப்போது, அம்மா, நான் உங்களிடம் பேச விரும்புகிறேன். நான் உங்களிடம் பேச விரும்புவதற்குக் காரணம் ஒன்றே ஒன்றுதான், அதாவது, நீங்கள்-நீங்கள் ஒரு பெண்மணி, நான் ஒரு ஆண். நாம் அதை அப்படியாக வைத்துக் கொள்வோம். "116 சரி இப்போது, இங்குள்ள இந்த அறை முழுவதும், இந்த அறை முழுவதும் மின்சாரம் இருக்கிறது. அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இப்போது, நான் நடுப்பகலில், வெளியே தெருவில் சென்று நின்று, என் முழு இருதயத்தோடும், ""மின்சாரமே, எரியும். மின்சாரமே, எரியும்"" என்று சத்தமிட்டுக் கத்தத் தொடங்கினால் என்ன ஆகும்? அது ஒருபோதும் எரியாது. நான் மின்சாரத்தின் விதியைப் பின்பற்ற வேண்டும். அது சரியா? அது உண்மை என்று எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்? ""ஆமென்"" என்று சொல்லுங்கள். [சபையார் ""ஆமென்"" என்று சொல்கிறார்கள்] இப்போது நான் மின்சாரத்தைத் திருப்பும் விதம்... அந்த விளக்குகள் வழியாக மின்சாரம் வருகிறது, அது அடைத்து வைக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், இந்த அறை முழுவதும் மின்சாரம் இருக்கிறது. ஆனால் நம்மால் கட்டுப்படுத்தக்கூடிய ஒரே காரியம், விளக்கில் உள்ளது மட்டும்தான்." 117 சரி இப்போது, தேவனுக்கு ஒரு விதி இருக்கிறது, அந்த விதிதான் அன்பு. தேவன் தமக்குத் தாமே விரோதமாகச் செயல்பட முடியாது. பிறகு நான் தேவனைச் சரியாக நேசித்தால், நான் அவர்மீது அன்பாக இருந்தால், நான் தேவனைப் பற்றிய சத்தியத்தைச் சாட்சியாகக் கூறுவேன். இந்த கட்டிடத்தில் என் மனைவியும் இருக்கிறார். நான் அவளை எவ்வளவு நேசிக்கிறேன் என்பது தேவனுக்குத் தெரியும். சரி, உங்களுக்குத் தெரியும், நல்ல காரியங்கள் அனைத்தும், மற்றும் எல்லாமே, என் மனைவிக்காகத்தான் இருக்கும். அது உங்களுக்குத் தெரியும். நிச்சயமாக. உங்கள் கணவர் உங்களுக்கு எப்படி இருப்பாரோ, அதே போலத்தான். சரி இப்போது, நாம் தேவனை நேசித்தால், நான் அவரை நேசிப்பதனால், அவர் மேலுள்ள என் நம்பிக்கை முழுமையானதாக மாறுகிறது. இப்போது, அன்பின் அந்த விதியை அவரால் மீற முடியாது, பாருங்கள், ஏனென்றால் அது என் இருதயத்தில் இருக்கிறது. 118 இப்போது, முதலாவது தமது வார்த்தைகளின் மூலம் அவர் இதை எனக்கு வாக்குத்தத்தம் செய்தார்; பின்பு அவர் ஒரு தூதனை அனுப்பி, என்னிடம் சொன்னார். அவர் என்னுடன் இருந்து எனக்கு உதவி செய்வார் என்று அவர் என்னிடம் சொன்னார். அப்படியானால் அந்த விதியை மீற முடியாது. பிறகு நான் அந்த விதியைக் கண்டறிய வேண்டும், அதற்கடுத்ததாக, நீங்கள் அங்கே ஒரு, மருத்துவச் சொல்லில் சொல்வதானால், ஒரு நோயாளியாக நிற்கிறீர்கள். சரி. 119 இப்போது, நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருந்தால், அதே மரத்தில் உங்களுக்காக ஏதோவொன்றைச் செய்ய, அந்த மரத்தின் ஒரு கிளையாக தேவன் என்னை அனுப்பியிருந்தால், சரி அப்படியானால், உங்களுக்காக ஏதோ வொன்றைச் செய்ய அவர் என்னை அனுப்பி யிருந்தால், நான் உங்களுடன் வைத்திருக்க வேண்டிய ஒருவித தொடர்பு இருக்க வேண்டும். பிறகு, உங்கள் வாழ்க்கையில்-உங்களுக்கு-உங்களுக்கு உண்மையாகவே இருக்கவேண்டிய ஏதோவொன்றைக் கண்டறிய வேண்டுமானால், பிறகு நான்... அது எனக்குக் காண்பிக்கப்பட வேண்டும். 120 நீங்கள் பூமியில் பிறந்தது முதல் செய்த அனைத்தின் ஒரு டேப் ரெக்கார்டிங் அங்கே தேவனிடம் இருக்கிறது. அவர் விரும்பினால், அந்தப் படத்தை எனக்காகத் திரும்பவும் ஓடச் செய்ய அவரால் முடியும். "இயேசு கிணற்றருகே இருந்த பெண்ணிடம் பேசியபோது, அதைத்தான் அவர் செய்தார். அவர், ""எனக்குக் குடிக்கத் தா"" என்று கேட்டார்." "அவள், ""நீர் ஏன் என்னிடம் அதைக் கேட்கிறீர்?"" என்று கேட்டாள், உங்களுக்குத் தெரியும், அதுபோலத்தான்." 121 ஆனால் அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? அவர் அவளுடைய ஆவியைத் தொடர்பு கொள்ள முயற்சித்தார். அதைத்தான் நானும் இப்போது சரியாகச் செய்ய முயற்சிக்கிறேன், உங்களைத் தொடர்பு கொள் ளவும், என்னைச் சுற்றிலும், எல்லா இடங் களிலும் இருக்கும் எல்லா ஆவிகளிலிருந்தும் உங்களைப் பிரிக்கவும் பார்க்கிறேன். புரிகிறதா? எல்லா இடங்களிலும் உள்ள மக்கள் விசுவாசிக்கிறார்கள், எல்லா இடங்களிலும் அது ஒரே விசுவாசக் கூட்டமாக இருக்கிறது. பிறகு, நீங்கள் ஒரு கால்வாயில் விழுவது போல் உங்களை உணரும்போது, அது இப்படி, அப்படி என்று தொடங்குகிறது. புரிகிறதா? 122 ஆனால் நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும், அது நீங்களாகத்தான் இருக்க வேண்டும், வேறு யாரோ அல்ல, நீங்கள் தான். அதுபோல சிலருக்குப் பிறகு, என்னுடைய சொந்த ஆவியே அதற்குள் நகரத் தொடங்குகிறது, அப்போது அது எங்கு இருக்கிறது என்பதை என்னால் காண முடிகிறது, எங்கும். ஹ்ம்ம். அதனால்தான் நான் மக்களை மேடைக்கு முதலில் வரவழைக்கிறேன், ஏனென்றால் நான் பிரசங்கம் செய்துகொண்டும், அப்படியே தொடர்ந்துகொண்டும் இருந்தேன், மேலும்... 123 ஆனால் நீங்கள்—நீங்கள் என்னை நம்புகிறீர்கள். மேலும் நீங்கள் ஒரு கிறிஸ்தவர், நீங்கள் ஒரு விசுவாசி. உங்களுக்கு ஒரு... பிரச்சனை உங்கள் முதுகில் இருக்கிறது. அது சரிதானே? அது உங்கள் முதுகில் உள்ளது, அவர்கள் எங்கே... உங்கள் முதுகில் அதை நான் பார்க்கிறேன். நீங்கள் ஏதோ ஒன்றைக் குறித்து ஆழமாகக் கவலைப்படுகிறீர்கள் என்று தோன்றுகிறது, அல்லது அது போன்ற ஒன்று. அது ஒரு குழந்தையைப் பற்றியது. வேடிக் கையாகப் பேசுகிற ஒரு குழந்தை உங்களிடம் இல்லையா, அல்லது அப்படி ஏதாவது? அதற்குப் பேச்சில் ஒரு குறைபாடு உள்ளது அல்லது—அல்லது—அல்லது... அது சரிதானே? அந்தக் குழந்தை இங்கே இல்லையா? நீங்கள் அந்தக் கோட்டை அணிந்திருக்கும்போது அதை உங்களுடன் நான் பார்க்கிறேன், மேலும் அதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று நான்—நான் அறிவேன். ஒரு நிமிடம் இங்கே வாருங்கள். 124 இரக்கமுள்ள பிதாவே, இந்தச் சிறிய தாய், தான் இப்போது உமது சமூகத்தில் இருக்கிறோம் என்றும், நீர் அவளுக்கு உதவ முடியும் என்றும் அறிந்து, நடுங்கியபடியே இங்கே நிற்கும்போது, அவளுடைய சரீரத் தையும், அதேபோல அவளுடைய குழந்தை யையும் நீர் குணமாக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன், அவர்கள் இருவரும் இன்றிரவு இந்த கட்டிடத்தை விட்டு முற்றிலும் இயல்பாகவும் சுகமாகவும் செல்லட்டும். அவர்களுடைய சரீரங்களைக் கட்டியிருக்கிற சத்துருவுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் சொல்லுகிறேன், இயேசுவின் இரத்தத் தினாலும், இப்போது இங்கே இருக்கிற பரிசுத்த ஆவியானவரின் ஆவியினாலும் உனக்கு நான் கட்டளையிடுகிறேன், நீ இந்த தாயையும் குழந்தையையும் விட்டு விலகிப்போ, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே. ஆமென். 125 இப்போது, சகோதரி, உங்களிடம் சொல்லப்பட்டது உண்மைதான். அது சரிதானே? இப்போது, பாருங்கள், நான் உங்களை... ஒரு குழந்தை உடல்நலமில்லாமல் இருந்தது பற்றியதோ, அல்லது வேறு ஏதோ ஒன்று என்றோ நான் நம்புகிறேன், உங்களுக்கு ஒரு குழந்தை இருந்தது. தரிசனங்கள், சட்டென்று, என்னுடன் பொருந்துவதில்லை, நான் என்ன—என்ன என்று உங்களுக்குப் புரிகிறதா... அது ஒரு குழந்தையைப் பற்றியது, எனக்குத் தெரியும், ஒரு பிள்ளை. சரி. "126 இப்போது, நீங்கள் அந்தக் குழந்தையிடம் செல்லும்போது, அது எங்கே இருந்தாலும், அதன் மீது உங்கள் கைகளை வைத்து, ""தேவனே, நான் இப்போது என் முழு இருதயத்தோடும் உம்மை விசுவாசிக்கிறேன்"" என்று நீங்கள் சொல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அந்தப் குழந்தை குண மடையும். நீங்களும் குணமடைவீர்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக." சரி, அடுத்த நோயாளி எங்கே? அம்மா, நீங்கள் தான் நோயாளியா? வாருங்கள். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? 127 நீங்கள் அந்தப் படங்களில் ஒன்றை வைத்திருப்பதை நான் பார்க்கிறேன். ஆமாம். ஒரு நிமிடம் நான் அதைப் பார்க்கட்டுமா? அது நடந்தபோது எனக்கு நினைவிருக்கிறது. அதில் அக்கினி எப்படிச் சுற்றிச் சுழல்கிறது என்பதைப் பார்க்கிறீர்களா? திரு. லேசி அங்கே, அது ஒரு... மரகத ஒளியைப் போலத் தோன்றியது என்றும், அது—அது சுற்றிலும் மின்னும் அக்கினியைப் போல இருந்தது என்றும் கூறினார். 128 உங்களுக்குத் தெரியும், தேவன் ஒரு அக்கினியாக இருக்கிறார். அதுதான், அவர்—அவர் தம்மை அக்கினியிலும் ஒளியிலுமே வெளிப்படுத்துகிறார். அது உங்களுக்குத் தெரியும். அதிகமாக, நமது மாம்சம் மற்றும் காரியங்களைப் போன்ற காஸ்மிக் (பிரபஞ்ச) ஒளி நிலையில் அல்ல, உங்களுக்குப் புரிகிறதா. 129 நினைவிருக்கிறதா, பைபிளில், பேதுரு சிறையில் இருந்த இடத்திலா? அப்போது ஒரு ஒளி ஜன்னல் வழியே உள்ளே வந்து, சிறைக்குள் இறங்கி, சிறைக்கதவுகளைத் திறந்து, அவனை வெளியே விட்டது. அதுதான் இஸ்ரவேல் புத்திரரை வழிநடத்திய அக்கினி ஸ்தம்பம். அவர்கள் அக்கினி ஸ்தம்பத்தால் வழிநடத்தப்பட்டார்கள். அது அதே ஒன்றுதான் என்று நான் நம்புகிறேன். அது அதே அக்கினிஸ்தம்பம் என்று நான் நம்புகிறேன். 130 நீங்களும் நானும் அறிமுகமில் லாதவர்கள் என்று நான் கருதுகிறேன். உங்களை எனக்குத் தெரியாது, உங்களுக்கு என்னைத் தெரியுமா இல்லையா என்றும் எனக்குத் தெரியாது, ஆனால் நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களாக இருக்கிறோம். ஆனால், உங்களுக்கு உதவ தேவன் என்னை அனுப்பினார் என்பதை—என்பதை நீங்கள் நம்புகிறீர்களா? நீங்கள் நம்புகிறீர்கள். 131 அப்படியானால், நான் அவருடைய தீர்க்கதரிசியாக, அல்லது, பிரசங்கியாக இருந்தால், நான் சொன்ன காரியங்கள்: எது உண்மையோ அதை தேவன் ஆதரிப்பார். அதை நீங்கள் நம்புகிறீர்களா? தேவன், அவர் தவறாதவர், அவர் அநந்தமானவர், அவர் சத்தியத்தை ஆதரிப்பார். பின்பு அவர்... 132 இப்போது உங்களைக் குணமாக்க, என்னால்—என்னால் முடியாது. அதைச் செய்ய உங்கள் சொந்த விசுவாசமே தேவை. ஆனால் உங்களுக்காக ஜெபிக்க தேவன் என்னை அனுப்பினார் என்று நீங்கள் நம்பி, என் போதனையின் மூலம் இயேசுவை நீங்கள் ஏற்றுக்கொண்டால், நீங்கள் குணமடைய முடியும். பாருங்கள். உங்களுக்காக... உங்கள் சரீரத்தை அவர் குணமாக்குவதற்காக நீங்கள் அவரை ஏற்றுக்கொண்டால், நீங்கள் சொஸ்த மடைய முடியும். 133 நீங்கள் யாரையோ உங்கள் மனதில் வைத்திருக்கிறீர்கள். அது கண்டிப்பாக, அது—அது உங்கள் தாய் தான். உங்களுக்கு ஒரு தாய் இருக்கிறாள், அவள்—அவள் உடல் நலமில் லாமல் இருக்கிறாள், அவளுக்கு ஏதோ ஒரு வகையான இரத்த அழுத்தம், அல்லது ஏதோ ஒன்று இருக்கிறது. அவர்கள் அவளுடைய கையைச் சுற்றி ஒரு பொருளை வைப்பதை நான் பார்க்கிறேன், ஒரு—ஒரு வகையான குறைந்த இரத்த அழுத்தம் என்று நான் நம்புகிறேன், அது சென்றது... அது சரிதானே? ஆமாம். 134 மேலும் உங்களுக்கு ஒரு வகையான, உங்கள் முதுகில் ஏதோ கோளாறு இருக்கிறது, உங்களுக்கு ஒரு—ஒரு நரம்புப் பிரச்சனை இருக்கிறது. நீங்கள் மிகவும் பதட்டமாக இருக்கிறீர்கள், மேலும் உங்கள் முதுகில் ஏதோ இருப்பதை நான் கவனிக்கிறேன். மேலும் பிறகு, உங்கள் கால்களில் ஏதோ இருக்கிறது, உங்களால் சரியாக நடமாட முடிவதில்லை என்பதை நான் பார்க்கிறேன், அது உங்கள் கால்களில் இருக்கிறது. அது உண்மையா? 135 நீங்கள்... உங்களைச் சுற்றி இருளாகிக் கொண்டிருக்கிறது. அல்லது அது உங்கள் தாயா? இல்லை, அது நீங்கள் தான். நீங்கள் ஒரு கிறிஸ்தவர் இல்லை. நீங்கள் ஒரு பாவி. இப்போது, ஒரு காரியம் நடக்கும் வரை, நான் அந்த ஆசீர்வாதத்தை அங்கே வைப்பதை தேவன் விரும்பவில்லை. இப்போது, கிணற் றருகே இருந்த பெண்ணை அறிந்திருந்த அதே இயேசுவுக்கு, அது மிகச் சரியாகத் தெரியும். இப்போது, நான் உங்களிடம் சொல்ல முடியும், இப்போது. உங்களுக்கு—அது உங்களுக்குத் தெரியும். 136 ஆனால் நீங்கள், இப்போது அவரை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்வீர்களா? உங்கள் வழிகளைக் கைவிட்டுவிட்டு, சபைக்குத் திரும்பி, தேவன் உங்களைச் செய்ய விரும்புவதைச் செய்து, உங்களுக்காகவும் உங்கள் தாய்க்காகவும் குணமடைவீர்களா? நான்... அவரை இப்போது நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? "[சகோதரி சொல்லுகிறார், ""நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை.""]" 137 நான் சொல்லுகிறேன், “நீங்கள் அவரை ஏற்றுக்கொண்டு, சபைக்குச் சென்று, சரியா னதைச் செய்து, உங்கள்—உங்கள் வாழ்நாள் முழுவதும் அவருக்குச் சேவை செய்வீர்களா?” நீங்கள் அப்படிச் செய்தால், இப்போதே அவர் உங்களிடமிருந்து சாபத்தை நீக்குவார் என்று நான் நம்புகிறேன். நீங்கள் அதைச் செய்வீர்களா? இப்போது நீங்கள் அவரை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்கிறீர்களா? பாவத்தை விட்டு விடுங்கள். இப்போது, ஒரு நிமிடம் இங்கே வாருங்கள். நான் உங்கள் கையை வெறும்... 138 சர்வவல்லமையுள்ள தேவனே, இந்த ஏழைச் சிறிய பெண், இங்கே வரிசையில் நழுவி வந்து, அவள் வியாதியாக இருப்பது மட்டுமின்றி, அக்கிரமங்களிலும் பாவங்களிலும் மரித்தவளாக இருக்கிறாள் என்பதைக் காண் கிறேன். ஆனால் தேவனே, நான் இரக்கத்திற்காக ஜெபிக்கிறேன். 139 ஒரு நாள் நான் பிடித்திருக்கும் இந்தக் கை குளிர்ந்து போக வேண்டும், ஜீவன் சரீரத்தை விட்டுப் பிரிய வேண்டும், மேலும் ஆத்துமா தன்னைத் தந்த தேவனிடம் செல்ல வேண்டும். மேலும் இந்தச் சரீரம் நொறுங்கி பூமியின் தூளின் சாம்பலுக்குள் போகும், தோல் புழுக்கள் அதை எடுத்துக்கொள்ளும். இன்றிரவிலிருந்து நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு, ஒருவேளை, எங்கேயோ வெகு தொலைவில், இந்தப் பழைய உலகம் துண்டு துண்டாக வெடித்துச் சிதறி, மணல்கள் ஊளையிட்டு, சுட்டெரிக்கும் பரப்பின் குறுக்கே காற்றடித்து... பூமியில் எந்த ஜீவராசியும் இல்லாமல் இருக்கலாம். ஒருவேளை அவளுடைய கல்லறைக்கல் புழுதியிலிருந்து வெளிவரலாம். ஆனால் அப்போது அவளுடைய ஆத்துமா எங்கே இருக்கும்? தேவனே, இப்போதே இரக்கமாயிரும், இந்தப் பெண்ணைக் காப்பாற்றும். இதை அருளுங்கள். எல்லாப் பாவங்களையும் எடுத்துப்போடும். 140 அவளுடைய அறிக்கையின் பேரிலும், அவள் இயேசுவை தன் இரட்சகராக ஏற்றுக்கொண்டதன் பேரிலும், நான் இப்போது அவளுடைய சரீரத்தின் வியாதியை எடுத்துப் போட இயேசுவை அவளுடைய குணமாக் குபவராகக் கேட்கிறேன், இன்றிரவு அவள் இங்கிருந்து, இயல்பாகவும் சுகமாகவும் செல்லட்டும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இந்த ஆசீர்வாதத்தைக் கேட்கிறேன். ஆமென். 141 தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்போது, உங்கள் வழியில் செல்லுங்கள், சந்தோஷப்படுங்கள், ஏதாவது ஒரு நல்ல முழு நற்செய்திச் சபையில் சேர்ந்து, ஞானஸ்நானம் பெற்று, உங்கள் வழியில் சந்தோஷமாகச் செல்லுங்கள், நீங்கள் குணமடைவீர்கள். நீங்கள் வீட்டிற்குச் சென்றதும் உங்கள் தாயின் மீது உங்கள் கைகளை வையுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 142 சரி. நீங்கள் கொண்டு வருவீர்களா? அம்மா, நீங்கள் நம்புகிறீர்களா? ஆம், நீங்கள் ஒரு விசுவாசி. எல்லா நோயாளிகளும், எல்லா மக்களும் அப்படி வர வேண்டும் என்று விரும்புகிறேன். இப்போது, மக்கள் அந்த வகையான விசுவாசத்துடன் வந்தால், அது அற்புதம் தானாய் இருக்கும். இங்கே பாருங்கள், சகோதரி, ஒரு நிமிடம். நான் உங்களை ஒரு நிமிடம் பார்க்க வேண்டும். நீங்கள் ஒரு விசுவாசி. நீங்கள் என்னையும் நம்புகிறீர்கள். எங்கும் சந்தேகத்தின் நிழல் கூட இல்லை. அதனால்தான், நீங்கள் மேடையைக் கடந்து வந்துகொண்டிருந்தபோது, அந்தச் சிறுநீரகப் பிரச்சனையிலிருந்து தேவன் உங்களைக் குணமாக்கினார், அதனால் அது—அது உங்களை விட்டு நீங்கியது. ஆமாம், ஆமாம். நீங்கள்... ஆகவே, தேவன் தமது குழந்-... இது மிகவும் அற்புதமாக இருக்கிறது. 143 நீங்கள் இங்கல்ல, வேறு இடத்தி லிருந்து வருகிறீர்கள். நீங்கள் எவன்ஸ் வில்லியைச் சேர்ந்தவர் அல்ல. நீங்கள் இல்லி னாய்ஸிலிருந்து வருகிறீர்கள். நீங்கள் ஜோன்ஸ், அல்லது ஜான்சன், ஜான்சன்ஸ்வில்லி போன்ற பெயரில் தொடங்கும் ஒரு இடத்திலிருந்து வருகிறீர்கள், அல்லது அது போன்ற ஒன்று. அது சரிதானே? உங்களுக்கு உடல்நலமில்லாத ஒரு கணவரும் இருக்கிறார். அவரை ரே, அல்லது ராய் அல்லது அதுபோல ஏதோ அழைக் கிறார்களா? ராய்? அது சரிதானே? அது உண்மையல்லவா? சரி. 144 நீங்கள் ஒரு தாய்—தாய், இல்லை, மாமியார் மீது அக்கறை கொண்டிருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். அது சரிதானே? அவளுடைய மார்பில் மூச்சுக்குழல்களில் ஏதோ பிரச்சனை இருக்கிறது. அது சரிதானே? நீங்கள்... நீங்கள் வீட்டிற்குச் செல்லலாம். நீங்கள் அனைவரும் சென்று குணமடையுங்கள். தேவன் உங்களுடன் இருக்கப் போகிறார். ஆண்டவரே, உமது நாமத்தினாலே அவளை ஆசீர்வதியும். "145 நீங்கள் வரு-... நண்பரே, இதை நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எதையும் நீங்கள் அணுகும் விதமான, உங்கள் மனப்பான்மைதான் அது. எஜமானரின் வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்ட அந்தப் பெண், வல்லமையை உணர்ந்தாள். ஆனால், அவருடைய தலையைச் சுற்றி ஒரு துணியைக் கட்டி, அவரைத் தலையில் அடித்த போர்வீரன், ""நீ ஒரு தீர்க்கதரிசியானால், உன்னை அடித்தவன் யார் என்று சொல், நான் உன்னை நம்புகிறேன்"" என்று சொன்னான்: அவர்கள் எந்த வல்லமை யையும் உணரவில்லை. நீங்கள் அதை அணுகும் விதத்தில்தான் இருக்கிறது. புரிகிறதா? அது நீங்கள் அணுகும் விதம்தான்." அது முடிந்தது, சகோதரரே. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமாம், ஆமாம். 146 ஐயா, எப்படி இருக்கிறீர்கள்? ஐயா, நீங்கள் அவரை நம்புகிறீர்களா? உங்கள் பிரச்சனை முதுகில் இருக்கிறது. அது வெகு காலத்திற்கு முன்பு சிரமத்தால் ஏற்பட்ட, ஏதோ ஒரு வகையான வட்டு கிழிந்தது, உங்களைக் குணமாக்க இயேசு கிறிஸ்து இங்கே இருக்கிறார். நீங்கள் அதை நம்புகிறீர்களா? இங்கே வாருங்கள். என்னை நோக்கி இப்படித் திரும்புங்கள். 147 தன் தாயின் வயிற்றில் இந்த மனிதனின் முதுகை உருவாக்கின தேவனே, உமது ஊழியனாக, இப்போது இந்த கட்டிடத்தின் மீது பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம் இருக்கிறது என்று விசுவாசித்து, நான் இவனுடைய முதுகின் மேல் கைகளை வைக்கிறேன். இப்போது இந்த மனிதனைக் குணமாக்கக்கூடிய ஒரே காரியமான தேவனுடைய வல்லமை, தேவனுடைய வல்லமை இறங்கி வந்து, அவனுடைய முதுகிற்குள் நகர வேண்டும் என்றும், அந்த—அந்தக் கிழிந்த இடம் விலகிப்போய், அவன் குணமடைய வேண்டும் என்றும் நான் கேட்கிறேன். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நான் அதைக் கேட்கிறேன்; மேலும் இதைச் செய்த பிசாசை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கண்டிக்கிறேன். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரரே. இப்போது சந்தோஷமாகச் செல்லுங்கள், குணமடையுங்கள். """தேவனுக்கு ஸ்தோத்திரம்"" என்று சொல்வோம். [சபையார் சொல்கிறார்கள், ""தேவனுக்கு ஸ்தோத்திரம்.""]" 148 ஒரு நிமிடம், சகோதரரே. இங்கே பாருங்கள், மீண்டும் ஒரு நிமிடம். இப்போது நீங்கள் குணமடைந்துவிட்டீர்கள், அல்லவா? உங்கள் பிரச்சனை உங்கள் முதுகில் இருந்ததா? ஆமாம். ஆம், ஐயா. அது சரி, செல்லுங்கள். 149 சரியாக அங்கே அமர்ந்திருப்பவரே: சகோதரி, உங்களுக்கு முதுகெலும்பில் மூட்டுவலி இருக்கிறது, இல்லையா? அது சரிதானே? அந்த மனிதன் தன் மேல் அந்த அபிஷேகத்தோடு கடந்து சென்றபோது, அந்தப் பிசாசு சரியாக அங்கே குதித்தது, அதை நான் அங்கேயே பார்த்தேன்; ஒரு மிகப்பெரிய வெளிச்சம் மேலே நகர்ந்து சென்றது போலத் தெரிந்தது, அதைப்போலவே, இருள் விலகிப் போனது. அது உங்கள் முதுகெலும்பில் இருப்பதை நான் பார்த்தேன். இப்போது நீங்கள் அதை நம்பினால், இயேசு கிறிஸ்து உங்களைக் குணமாக்கப் போகிறார். நீங்கள் அதை நம்புகிறீர்களா? சரி, உங்கள் கால்களில் எழுந்து நில்லுங்கள், இயேசுவின் நாமத்தில் அதை ஏற்றுக்கொள்ளுங்கள். இதோ அது போகிறது. அது உங்களை விட்டுப் போய்விட்டது. ஆமென். """தேவனுக்கு ஸ்தோத்திரம்"" என்று சொல்வோம். [சபையார் சொல்கிறார்கள், ""தேவனுக்கு ஸ்தோத்திரம்.""]" அந்தச் சத்துருக்கள், அவர்கள் எப்படி முயற்சிக்கிறார்கள்... ஆமென்! ஆ, என் தேவனே. சாத்தான் ஜெயிக்கப்பட்டான். அவன் வல்லமையில் கட்டப்பட்டிருக்கிறான். அவனால் இயேசு கிறிஸ்துவிடமிருந்து தப்ப முடியாது. விசுவாசியுங்கள். 150 பிங்க் நிறம் போன்ற கோட் அணிந்து அங்கே அமர்ந்திருப்பவரே. அம்மா, உங்களிடம் ஜெப அட்டை இல்லை, அல்லவா? உங்களிடம் ஜெப அட்டை இல்லை. ஆனால் உங்களுக்கு ஆஸ்துமா மற்றும் சைனஸ் இருக்கிறது. அது சரிதானே? உங்களிடம் ஜெப அட்டை இல்லையா? ஜெப அட்டை இல்லை. சரி. எழுந்து உங்கள் கால்களில் நில்லுங்கள், இயேசு கிறிஸ்து உங்களைக் குணமாக்குகிறார். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்போது நீங்கள் உங்கள் வழியில் வீட்டிற்குச் செல்லலாம், சந்தோஷமாக இருங்கள், மகிழ்ச்சியாக இருங்கள், குணமடையுங்கள். ஆமென். என்ன நடந்தது என்பதை ஒரு நிமிடம் அவள் உணரவில்லை. இப்போது அவள் உணருகிறாள். "151 அம்மா, எப்படி இருக்கிறீர்கள்? நோயாளியா? ஓ, எவ்வளவு அற்புதம். தேவன் மேல் விசுவாசமாய் இருங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் அவரை நம்புங்கள். நான் அவருடைய தீர்க்கதரிசி என்று நீங்கள் நம்புகிறீர்களா? உங்களைக் குணமாக்க அவர் இங்கே இருக்கிறார் என்று நீங்கள் நம்புகிறீர்களா? [சகோதரி சொல்லுகிறார், ""ஏற்கனவே அதைச் செய்துவிட்டார்.""] நான் அதை நம்புகிறேன், அம்மா. நீங்களுக்கே உரிய, உங்களிடமிருந்து வரும் அந்த அதிர்வின் ஆவி, உண்மையாகவே பாய்ந்து வருவது போல் தோன்றுகிறது. இப்போது, அங்கே..." 152 நீங்கள் இங்கிருந்து வந்தவர் அல்ல, இல்லை, நீங்கள் இந்த நாட்டிலிருந்தும் வந்தவர் இல்லை. நீங்கள் இங்கிருந்து வெகு தொலைவில் இருந்து வருகிறீர்கள். நீங்கள் நீண்ட தூரம் வந்திருக்கிறீர்கள். நீங்கள் தொலை தூரக் கிழக்கிலிருந்து, மலைகள், ஏராளமான தேவதாரு மரங்கள் மற்றும் ஏரிகள் உள்ள ஒரு நாட்டிற்கு வருகிறீர்கள். நான் நியூயார்க் என்று சொல்வேன். 153 மேலும் நீங்கள் ஒரு சிறுவனுக்காக, ஒரு மகனுக்காக இங்கே வந்திருக்கிறீர்கள், அவனுக்கு மது அருந்தும் கெட்ட பழக்கம் இருக்கிறது, ஒரு குடிகாரன், எந்த சிகிச்சையும் இல்லை, எந்தக் கட்டுப்பாடும் இல்லை, அதற்கு உதவ நீங்கள் எதுவும் செய்ய முடியாது. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, அம்மா. இங்கே வாருங்கள். 154 இந்தப் பெண்ணுக்கு தன் கர்ப்பத்தின் கனியைக் கொடுத்த தேவனே, அங்கே கிடக்கிற அந்த ஏழைச் சிறுவனுக்காக, ஆண்டவரே, நான் இரக்கத்திற்காக ஜெபிக்கிறேன். மேலும் அவள் திரும்பிச் செல்லும்போது, இந்த நேரத்தில் இந்தப் பூமியைக் கீழே பார்க்கக்கூடிய சர்வவல்லமையுள்ள தேவனுடைய வல்லமை இங்கே பார்க்க வேண்டும் என்றும், யோவான் மாற்குவின் வீட்டில் நடந்த அந்த ஜெபக் கூட்டத்தைக் கேட்ட தேவனுடைய தூதன், இன்றிரவு இங்கே நடக்கும் ஜெபக் கூட்டத்தைக் கேட்பார் என்றும், இந்த நேரத்தில் அந்தச் சிறுவன் இருக்கும் இடத்திற்குச் சென்று, அவனிடமிருந்து அந்தப் பிசாசை அகற்றுவார் என்றும், அவன் குணமடைய வேண்டும் என்றும் நான் ஜெபிக்கிறேன். அதை அருளுங்கள், ஆண்டவரே. நான்... அந்தப் பிசாசு சபிக்கப்படுவதாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அது அவனை விட்டு விலகுவதாக. 155 தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரி, அது மட்டுமல்ல, உங்களுக்கு இருந்த காரியங்களும் உங்கள் சரீரத்தை விட்டு விலகிவிட்டன; மேலும் உங்கள் சிறுவன் ஒரு நல்ல மனிதனாக மட்டுமல்ல, ஒரு கிறிஸ்தவ னாகவும் மாறப்போகிறான் என்று நான் நம்புகிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப் பாராக. இப்போது செல்லுங்கள். "156 ""கர்த்தருக்கு ஸ்தோத்திரம்"" என்று சொல்வோம். [சபையார் சொல்கிறார்கள், ""கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.""] அதை மீண்டும் சொல்வோம், மிகச் சத்தமாக, ""கர்த்தருக்கு ஸ்தோத்திரம்."" அதை இன்னும் ஒரு முறை சொல்வோம், ""கர்த்தருக்கு ஸ்தோத்திரம்."" மேலும் என்னிலுள்ள யாவும், ""அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்தரிக்கக் கடவது."" ஆமென்." 157 அம்மா, நீங்கள் நம்புகிறீர்களா? உங்கள் முழு இருதயத்தோடும் நம்புகிறீர்களா? இப்போது நான் தேவனிடம் கேட்டால், நாம் தேவனிடம் கேட்பதை எல்லாம் தேவன் செய்வார் என்று நீங்கள் நம்புகிறீர்களா. நீங்கள் அதை நம்புகிறீர்களா? இப்போதே, மேடையில் நின்றுகொண்டு, நாம் அவரிடம் கேட்பதை எத்தனை பேர் நம்புகிறார்கள்? சரி, இங்கே வாருங்கள். 158 எங்கள் பரம பிதாவே, நீரே அவளையும் அவளுடைய சிறுவனையும் ஆசீர்வதித்து, அவர்களைக் குணமாக்க வேண்டும் என்றும், அவர்கள் இந்த மேடையை விட்டு மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், சந்தோஷமாகவும் செல்ல வேண்டும் என்றும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நான் அதைக் கேட்கிறேன். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரி. சரி, வாருங்கள், அம்மா. இப்போது நீங்கள் வரும்போது, உங்கள் முழு இருதயத்தோடும் நம்புங்கள். நீங்கள் இங்கே வருவதற்கு முன்பே தேவன் அதைச் செய்யப்போகிறார் என்று நம்புகிறீர்களா? "159 நாம் அனைவரும் ""கர்த்தருக்கு ஸ்தோத்திரம்"" என்று சொல்வோம். [சபையார் சொல்கிறார்கள், ""கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.""] தேவன் உங்களைக் குணமாக்குவார் என்று நம்புகிறீர்களா? நீங்கள் அதை விசுவாசத்தின் அடிப்படையில் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறதா?" 160 சரி, சகோதரி, நீங்கள் உங்கள் சுகத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா? உங்கள் முழு... நம்புகிறீர்களா? நான் உங்களிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாவிட்டாலும், இன்னும், நீங்கள் குணமடைந்துவிட்டீர்கள் என்று நம்புகிறீர்கள். அது சரிதானே? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, அப்படியே செல்லுங்கள். ஆமென். அப்படிதான் அதைச் செய்ய வேண்டும். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சென்று அதைப் பெற்றுக்கொள்ளுங்கள், சகோதரி. அதுதான் வழி. சரி, வாருங்கள். 161 அங்கே ஒரு சகோதரி ஜெபித்துக் கொண்டிருக்கிறார். என்ன நடந்தது என்று எனக்குச் சரியாகத் தெரியவில்லை; ஆனால் ஒரு நிமிடம் பொறுங்கள். ஒவ்வொருவரும், உங்கள் இருதயத்தில் ஜெபத்தோடு இருப்போம், ஜெபித்துக் கொண்டே இருங்கள், தேவன் செய்வார் என்று மட்டும் விசுவாசியுங்கள். அவர் செய்வார் என்று நீங்கள் விசுவாசிக்கவில்லையா? அந்த பெருங்குடல் வியாதியிலிருந்து தேவன் உங்களை குணமாக்குகிறார் என்று விசுவாசிக் கிறீர்களா, சகோதரி? தேவன் உங்களை சுகமாக் குவார் என்று விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அதை ஏற்றுக் கொள்கிறீர்களா? சரி, அவர் செய்துவிட்டார். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இதோ, நீங்கள் சுகமாகிவிட்டீர்கள். உங்களை சுகமாக்கி விட்டார். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. விசுவாசமாய் மட்டும் இருங்கள். 162 அங்கே ஒரு மனிதர் உட்கார்ந்திருப்பதை நான் காண்கிறேன், ஒரு மூச்சுக்குழாய் வியாதி நிலை. அது சரிதானே, ஐயா? அது மூச்சுக்குழாய் வியாதிதான். ஆம். உங்களுக்கு வேண்டுமா... அவர் இப்போது உங்களை குணமாக்குவார் என்று நீங்கள் விசுவாசிக் கிறீர்களா? அவரை உங்கள் பரிகாரியாக ஏற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா? உங்கள் கால்களில் எழுந்து நில்லுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சென்று சுகமடையுங்கள். அப்படித்தான் செய்ய வேண்டும். தொடர்ந்து ஜெபியுங்கள், தொடர்ந்து விசுவாசியுங்கள். "163 நீங்கள் உங்கள் புத்தகத்தை உயர்த்தினீர்கள், அங்கே, அவளுக்குப் பக்கத்தில், அம்மா, அல்லது, அவளிடமிருந்து இரண்டாவது பெண்மணி. நான் ஒரு புத்தகத்தைக் கண்டேன், அல்லது யாரோ... அது படங்களில் ஒன்று, அல்லவா? ஒரு நிமிடம் உங்கள் கால்களில் எழுந்து நில்லுங்கள். ம்-ஹும். உங்களுக்கு சைனஸ் பிரச்சனை இருக்கிறது, அல்லவா? அதிலிருந்து நீங்கள் குணமடைய விரும்பு கிறீர்களா? உங்கள் கையை உயர்த்தி, ""நான் தேவனை என் பரிகாரியாக ஏற்றுக் கொள்கிறேன்"" என்று சொல்லுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. வீட்டிற்குச் சென்று சுகமாய் இருங்கள். அதுதான்—அப்படித்தான் வழி. ஆமென்." 164 நீங்கள் வீட்டிற்குச் சென்று உங்கள் இராப்போஜனத்தை சாப்பிட விரும்புகிறீர்களா? அந்த பழைய வயிற்றுப் பிரச்சனையிலிருந்து விடுபட வேண்டுமா? அது ஒரு பழைய அல்சர், நீண்ட காலமாக உங்களைத் தொந்தரவு செய்கிறது. கர்த்தராகிய இயேசுவின் நாமத்தி னாலே, சென்று உங்கள் இராப்போஜனத்தை சாப்பிடுங்கள், சுகமடையுங்கள். """கர்த்தருக்கு ஸ்தோத்திரம்"" என்று சொல்வோம். [சபையார், ""கர்த்தருக்கு ஸ்தோத்திரம்"" என்கிறார்கள்.]" 165 வாலிபனே, நீ என்ன நினைக்கிறாய்? அங்கே, சிறிய, நீல நிற ஜாக்கெட் அணிந்து கொண்டு அமர்ந்திருக்கிறாயே. நீண்ட காலமாக தலைவலியால் அவதிப்படுகிறாய், அல்லவா? அதிலிருந்து விடுபட விரும்புகிறாயா? அங்கே உனக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருப்பது உன்னுடைய அப்பா, அல்லவா? அவருக்கு இருதய நீர்க்கோவை இருக்கிறது (இல்லையா?) மற்றும் தமனிகள் கடினப்படுதல் வியாதி உள்ளது. அவர் மீதும் உன் கையை வை. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. ஓ கர்த்தராகிய இயேசுவே, அவர்கள் இருவரையும் சுகமாக்கும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, அவர்கள் வீட்டிற்குச் சென்று, முழுமையாகச் சுகமடையட்டும், பிசாசை நான் கடிந்து கொள்கிறேன். அல்லேலூயா! "166 சரி, அம்மா. நீங்கள் விசுவாசித்தால் நீங்கள் அனைவரும் குணமடைய முடியும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? இந்தப் பெண்கள் சம்பந்தமான வியாதி உங்களை விட்டு நீங்கிவிட்டது என்று விசுவாசிக் கிறீர்களா? மகிழ்ச்சியோடு செல்லுங்கள், ""நன்றி, கர்த்தராகிய இயேசுவே"" என்று சொல்லுங்கள்." 167 சரி, வாருங்கள், அம்மா. நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? உங்கள் முழு இருதயத் தோடும்? நீங்கள் இப்போது விசுவாசித்தால், நீங்கள் கேட்பதை பெற்றுக்கொள்ளலாம். மக்களே, நான்—நான்... இது நான் பிரசங்கிக்கவில்லை, இது தேவன் தமது பிரசங்கத்தை செய்கிறார், நான் அல்ல. நீரிழிவு நோய் உங்களை விட்டு நீங்கப்போகிறது என்று விசுவாசிக்கிறீர்களா? விசுவாசிக்கிறீர்களா? உங்கள் சுகத்தை ஏற்றுக் கொள்கிறீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, சென்று சுகமடையுங்கள். 168 சரி, வாருங்கள். ஆச்சரியமே, அவர் என்னவெல்லாம் செய்ய முடியும். இப்போது, மரணம் அருகில் வட்டமிடுகிறது, ஏதோ ஒன்று குளிராக, என்னைத் தாக்குகிறது: அது இந்தப் பெண்மணியிடமிருந்து வருகிறது. உங்கள் நிலைமையை நீங்கள் உணருகிறீர்களா? புற்றுநோய். வாழ்வதற்கு, அதிக நாட்கள் இல்லை. ஆனால் இயேசு கிறிஸ்து உங்கள் ஜீவனைக் காப்பார். நீங்கள் அவருக்கு ஊழியம் செய்வீர்களா? நான் அதைச் சபித்துக் கேட்டால், அது உங்களை விட்டு நீங்கிவிடும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? 169 புற்றுநோயே நீ சபிக்கப்படுவாயாக. இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றென்றைக்கும் மாறாதவராயிருக்கிறார் என்கிற சாட்சியின் காரணமாக நாங்கள் ஜெயத்தை உரிமை கொண்டாடுகிறோம், இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, அது இந்தப் பெண்மணியை விட்டு நீங்குவதாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, பிசாசானவன் இந்தப் பெண்மணியை விட்டு நீங்குவானாக. ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அப்படித்தான், அப்படித்தான் அதைச் செய்ய வேண்டும். சரி. வாருங்கள், அம்மா. ம்ம். ஆச்சரியமே, என்ன நடக்கக்கூடும்? இப்போது என்ன நடக்க முடியும்? அங்கே, ஊமையர்களாய் இருக்கிற நீங்கள் அனைவரும் எப்படி? ஏன் நேராக உள்ளே வந்து, இப்போது தேவனை விசுவாசிக்கக் கூடாது? ...?... தேவன் அவளை ஆசீர்வதிப்பாராக. ஏதோ ஒன்று நடந்தது. ஓ, அங்கே குணமடைந்த பெண்மணி அவர்தானே, அல்லவா. 170 அவளுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து அழுது கொண்டிருக்கும் அம்மா, அந்த பெருங்குடல் வியாதியிலிருந்து நீங்கள் விடுபட வேண்டுமா, அம்மா? நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்க வேண்டுமா, மற்றும் விசுவாசியுங்கள்... தேவன் உங்களை சுகமாக்கப் போகிறார் என்று. ஏன், நீங்களும் அதைப் பெற்றுக்கொள்ளலாம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 171 இந்தப் பெண்கள் சம்பந்தமான வியாதி மற்றும் மூட்டுவலி போன்ற காரியங்களிலிருந்து நீங்கள் விடுபட வேண்டுமா? இதற்காக தேவனுக்கு நன்றி சொல்லிக்கொண்டே, மேடையை விட்டு கீழே செல்லுங்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவ்வளவுதான், நன்றியுள்ளவர்களாய் இருங்கள். அவர் அதைச் செய்துவிட்டார். 172 சரி. வாருங்கள், அம்மா. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? நீங்கள் என்னை விசுவாசிக் கிறீர்களா? தேவனின் தாசனாக? நன்மையாக இருங்கள், இன்சுலின் எடுப்பதை நிறுத்தி விடுங்கள், மீண்டும் முழுமையாகச் சுகமாய் இருங்கள். அல்லவா? தேவன் உங்களை அப்படிச் செய்ய அனுமதிப்பார் என்று விசுவாசிக்கிறீர்களா? நீ விசுவாசித்தபடியே உனக்காகக்கடவது. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. செல்லுங்கள், இயேசு கிறிஸ்து உங்களோடு இருப்பாராக. 173 சரி, வாருங்கள். தேவனுக்கு இருதய வியாதி அல்லது வயிற்று வியாதி என்றால் என்ன? அவரால் அதைச் சுகமாக்க முடியும், அல்லவா? அவர் இப்போது உங்களுக்காக அதைச் செய்கிறார் என்று விசுவாசிக்கிறீர்களா? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. செல்லுங்கள், நீங்கள் விசுவாசித்தபடியே உங்களுக்கு ஆகும். """கர்த்தருக்கு ஸ்தோத்திரம்"" என்று சொல்லுங்கள். [சபையார், ""கர்த்தருக்கு ஸ்தோத்திரம்"" என்கிறார்கள்.]" சரி. நீங்கள் வரும்போதே, குணமடைந்து விட்டீர்கள் என்று விசுவாசிக்கிறீர்களா, சகோதரி? உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? இங்கே வாருங்கள். சாத்தானே, இந்தப் பெண்மணியை விட்டு விலகு. இப்போதே அவளது விசுவாசத்தை மேற்கொள்ள முயலும் பிசாசே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, அவளை விட்டு வெளியே வா என்று நான் உனக்கு ஆணையிடுகிறேன். "இப்போது இந்த வழியே பாருங்கள், இப்போது உங்கள் சுகத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். ""கர்த்தாவே, உமக்கு நன்றி"" என்று சொல்லி, சத்தமிட்டு, மகிழ்ச்சியோடு மேடையை விட்டுச் சென்று சுகமடையுங்கள்." 174 சரி. வாருங்கள், அம்மா. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் முழு இருதயத் தோடும், நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? மாத விடாய் நிற்கும் காலத்தில் தொடங்கி, நீண்ட காலமாக நீங்கள் நரம்புத்தளர்ச்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள், அதை நீங்கள் இன்னும் கடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள். அது உங்கள் வயிற்றில் ஒரு அல்சரை உருவாக்கியுள்ளது, உங்களுக்கு ஒரு வயிற்றுப் பிரச்சனையும், அத்துடன் உங்கள் பெண்கள் சம்பந்தமான வியாதியும் உள்ளது, அது வடிகிறதைப் போன்றது. அது உண்மைதானே? தேவனைத் தவிர வேறு யாருக்கும் அது தெரியாது, ஏனென்றால், அந்த நேரத்தில் கழிப்பறையில் யார் இருப்பார்கள்? சரி, நீங்கள் குணமடைந்துவிட்டீர்கள். உங்கள் வழியில் செல்லுங்கள், மகிழ்ச்சியாயிருங்கள், நீங்கள் சுகமாக்கப்படுவீர்களாக. """கர்த்தருக்கு ஸ்தோத்திரம்"" என்று சொல்வோம். [சபையார், ""கர்த்தருக்கு ஸ்தோத்திரம்"" என்கிறார்கள்.]" 175 சரி. வாருங்கள், ஐயா. மிகுந்த சிரமத்துடன், உங்கள் முதுகில் ஏதோவொன்றை வைத்து, உங்கள் முதுகை சுளுக்கிக் கொண்டீர்கள். உங்கள் வழியில் செல்லுங்கள், நீங்கள் இப்போது சுகமடையப் போகிறீர்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களோடிருந்து உங்களுக்கு உதவி செய்வாராக. """கர்த்தருக்கு ஸ்தோத்திரம்"" என்று சொல்வோம். [சபையார், ""கர்த்தருக்கு ஸ்தோத்திரம்"" என்கிறார்கள்.]" ஓ, நான் அவரை எவ்வளவு நேசிக்கிறேன், நான் அவரை எவ்வளவு ஆராதிக்கிறேன், ஜீவன், சூரிய ஒளி, மகிழ்ச்சி, சமாதானம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரி ராபர்சன். எனக்கு உங்களைத் தெரியும். அவர் இப்போதே உங்களுக்கு அருகில் நின்று கொண்டிருக்கிறார். "176 தாயே, அங்கே ஒரு நிமிடம் நில்லுங்கள். நீங்கள் இருதய வியாதியிலிருந்து விடுபட வேண்டுமா? உங்கள் கையை உயர்த்தி, ""நான் என் சுகத்தை ஏற்றுக் கொள்கிறேன்"" என்று சொல்லுங்கள். திரும்பி உங்கள் வீட்டிற்குப் போங்கள்; கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே, நீங்கள் சுகமடையப் போகி றீர்கள். அல்லது, நீங்கள் விரும்பினால் இந்த வழியே செல்லுங்கள்; இந்த வழியே வாருங்கள். உங்கள் சுகத்திற்காக தேவனுக்கு நன்றி செலுத்தி, மகிழ்ச்சியோடு மேடையை விட்டுச் செல்லு ங்கள், ""அன்புள்ள தேவனே, உமக்கு நன்றி. கர்த்தாவே, உமக்கு நன்றி"" என்று சொல்லுங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள், தேவன் உங்களை முழுமையாகச் சுகமாக்குவார், சகோதரி." 177 சரி. வாருங்கள், ஐயா. நீங்கள் வர விரும்புகிறீர்களா? நீங்கள் திரும்பி, கீழே செல்லுங்கள், ஏனென்றால் நீங்கள் எப்படியும் ஏற்கனவே குணமடைந்துவிட்டீர்கள். இருதய வியாதியிலிருந்து தேவன் உங்களை சுகமாக்குகிறார். நீங்கள், திரும்பிச் செல்லுங்கள். "178 இப்போதே எத்தனை பேர் குணமடைய விரும்புகிறீர்கள்? உங்களில் சிலர், இங்கே, விரல்களைப் பயன்படுத்தி ஊமையர்களிடம் பேசிக்கொண்டிருக்கிறீர்களே. ஊமையர்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும், இப்போதே எழுந்து நின்று, உங்கள் விரல்களை உங்கள் காதுகளில் வையுங்கள். ஊமையர்கள் அனைவரும் எழுந்து நின்று, உங்கள் விரல்களை உங்கள் காதுகளில் வையுங்கள். உங்கள் விரலை, ஒரு விரலை உங்கள் காதிலும், மற்றொன்றை உங்கள் வாயின் மீதும், இதுபோல வையுங்கள். நான் ஜெபித்து முடிக்கும்போது, உங்கள் முழு சத்தத்தோடு, ""கர்த்தருக்கு ஸ்தோத்திரம்"" என்று நீங்கள் கத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன்." மீதமுள்ளவர்கள் நீங்கள் நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்கள் கால்களில் எழுந்து நில்லுங்கள். 179 நான் உங்களுக்குச் சொல்வதை நீங்கள் செய்தால், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பார்த்த மிகச்சிறந்த காட்சிகளில் ஒன்றை நீங்கள் காண்பீர்கள். ஊமையர்கள் பேசப்போகிறார்கள். இப்போது அவர்கள் இந்த விசுவாசத்தை மட்டுமே கொண்டிருந்தால், அவர்கள் பேசப்போகிறார்கள். இதுதான் அந்த நேரம். 180 அங்கே, தேவன் என்னை அந்தக் கூட்டத்தின் பால் ஈர்த்துக்கொண்டே இருக் கிறார். என்னால் அவர்களைக் கட்டாயப்படுத்த முடியாது. அவர் அங்கே அவர்கள் மீது மாலை முழுவதும் நின்றார், அவர் தொடர்ந்து அந்தக் கூட்டத்தின் மீதே வந்து இறங்குகிறார். நீங்கள் என்னைக் கவனித்தால், நான் அந்தக் கூட்டத்தையே தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அது அங்கே நின்றது. 181 என்னால் அவர்களிடம் சொல்ல முடியாது, ஆனால் நான் விசுவாசி-... அவர் இப்போதே அங்கே நின்று கொண்டிருக்கிறார். அவர்கள் இப்போது அதை விசுவாசித்தால், இங்கே, மேடையில் அவர்கள் சாட்சி சொல்ல வருவதை நீங்கள் கேட்பீர்கள் என்று நான் நம்புகிறேன், அவர்கள் விசுவாசித்தால் மட்டுமே. மீதமுள்ளவர்கள், தேவனுக்கு நேராக உங்கள் கைகளை உயர்த்துங்கள். 182 சர்வவல்லமையுள்ள தேவனே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, நீர் ஒவ்வொரு வியாதியையும் ஒவ்வொரு பிசாசையும் கடிந்துகொள்ள வேண்டும் என்றும், இந்த மக்களிடமிருந்து இந்த ஊமை ஆவிகளைக் கடிந்துகொள்ள வேண்டும் என்றும், அது அவர்களை விட்டு வெளியேற வேண்டும் என்றும் நான் இப்போது கேட்கிறேன்; செவிடர்கள் அனைவரும் கேட்கவும், ஊமையர்கள் பேசவும், குருடர்கள் பார்க்கவும், முடவர்கள் நடக்கவும், தேவனுடைய மகிமை மக்கள் மீது தங்கியிருக்கவும் கிருபை செய்யும்.